தங்கை காளியம்மாள் போறதா இருந்தா போகட்டும் ... சீமான் அட்ராசிட்டி!

தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்து விட்ட நாம் தமிழர் கட்சியிலிருந்து கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து நிர்வாகிகள் வெளியேறி வருகின்றனர். பெரியார் குறித்து சீமான் பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையாகின.இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த நகர்வுகள் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் இன்று முக்கிய பொறுப்பில் இருந்த காளியம்மாளும் விலக இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது.
மார்ச் 3ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு அருகே நிகழ்ச்சி ஒன்று நடைபெறவிருக்கிறது.
அந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில் காளியம்மாள் பெயருக்கு கீழ் , சமூக செயற்பாட்டாளர் என்று மட்டுமே போடப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, நிகழ்ச்சியில் நாதக மட்டுமின்றி திமுக, காங்கிரஸ் கட்சிகளும் கலந்து கொள்ளவிருப்பதால் காளியம்மாள் நாதகவில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கு விளக்கம் அளிப்பேன் எனவும் காளியம்மாள் கூறியது இன்னும் இந்த தகவலை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது. மதுரை விமான நிலையத்தில் இது குறித்து ” எனக்கு என்னவென்று தெரியவில்லை அவருடைய முடிவு குறித்து.. ஆனால், அவருக்கு கட்சிக்குள் முழு சுதந்திரம் இருக்கிறது. எனவே, கட்சியில் இருந்து அவர் விலகுவதற்கும் சுதந்திரம் இருக்கிறது.
தங்கச்சிக்கு முதலில் நாங்கள் தான் சமூக செயற்பாட்டாளர் பதவி கொடுத்தோம். அவரை அரசியலுக்கு அழைத்து வந்ததும் நாங்கள் தான். போகும்போதும் சரி திரும்பி வரும்போதும் சரி ரொம்ப நன்றி என்று தான் நாங்கள் சொல்வோம். போறதா இருந்தா போங்க..அது தான் எங்களுடைய கொள்கை. பருவகாலங்களில் இலையுதிர் காலம் என்று ஒன்று வருவது அனைவருக்கும் தெரியும்.
அதேமாதிரி எங்களுடைய கட்சியில் இது கலையுதிர் காலம் வருவார்கள் போவார்கள். எனவே, என்னை பொறுத்தவரையில் தங்கை காளியம்மாள் விலகவேண்டும் என்றால் விலகட்டும்..இங்கு இருந்து விலகி வேறு கட்சியில் இணைந்து பணியாற்ற எல்லா சுதந்திரமும் அவருக்கு இருக்கிறது” என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!