தொங்கு சட்டசபை வந்தால் கிங் எனப்பேசப்பட்டவர் பறந்தார் சிங்கப்பூருக்கு !!

 
குமாரசாமி


224 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு 10ம்தேதி நடைபெற்று முடிந்துள்ள நிலையில், வருகிற ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடக்க இருக்கிறது ஆறு தனியார் தொலைக்காட்சிகளில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் இரண்டு பாஜகவும் இரண்டு காங்கிரஸும் இரண்டு தொங்கு சட்டசபையும் அமையும் என கருத்துக்கணிப்பு வெளியிட்டு இருக்கிறார்கள்.

கர்நாடகா
கர்நாடகா சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவுக்கு பிறகு வெளியான, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் கர்நாடகாவில் தொங்கு சட்டசபை அமையும். ஆனால், தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் உருவெடுக்கும் என பல்வேறு ஊடகங்கள் கருத்து வெளியிட்டு இருக்கிறது.இந்நிலையில் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் முதல்வர் பதவிக்கான போட்டியில் முன்னாள் முதல்வர் சித்தராமைய்யா, மாநில காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் ஆகியோர் முன்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிவக்குமாரிடம் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் நீங்கள் முதல் முதல்வராக வராவீர்களா ? என கேள்வி எழுப்பினார்கள்.

கர்நாடகா

அதற்கு அவர் "நான் முதல்வர் பதவிக்கான போட்டியாளர்களில் இல்லை. கட்சி எனக்கு மாநிலத்தலைவர் பதவியை கொடுத்தது. அந்த பணியை சிறப்பாக செய்து வருகிறேன். முதல்வர் யார் என்பதை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, எல்லாருடனும் பேசி, கட்சி மேலிடம் முடிவு செய்யும்" எக்கூறியிருக்கிறார் சிவக்குமார். 
இந்நிலையில் முன்னாள் பிரதமரும், ஜே.டி.எஸ்., தலைவருமான, எச்.டி.தேவேகவுடாவின் மகனின் கட்சிக்கு கிட்டத்தட்ட 20ல் இருந்து 30 தொகுதிகள் வரை கிடைக்கும் என கருத்துக்கணிப்புக்கள் வெளியாகி இருந்தது அவர்தான் கிங்மேக்கராக இருப்பார் எனக்கூறி வந்தார்கள் ஆனால் அவர் திடீரென சிங்கப்பூருக்கு பறந்து விட்டார்.கர்நாடகாவில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்குமா கிடைக்காதா என்பதே மில்லியன் டாலர் கேள்வியாக இருக்க குமாரசாமி கும்பிடு போட்டுவிட்டு சிங்கப்பூர் கிளம்பி இருப்பது மேலும் பல வியூகங்களுக்கு வழிவகுத்துள்ளது

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web