"கேக் தரலன்னா கடைய அடிச்சு நொறுக்கிடுவேன்” அதிமுக பிரமுகர் பேக்கரியை அடித்து உடைத்து அட்டகாசம்!

திருவள்ளுர் மாவட்டத்தில் அடுத்த காக்களூர் சிக்னல் பகுதியில் குன்னவலம் பகுதியில் வசித்து வருபவர் உமா காந்த் கடந்த 4 ஆண்டுகளாக கேக் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த கடைக்கு கடந்த மாதம் திருவள்ளுர் அடுத்த சேலைபகுதியில் வசித்து வரும் வழக்கறிஞரும் அதிமுக பிரமுகருமான ராஜேஷ் ரூ1000 மதிப்பில் ஆர்டர் கொடுத்து பிறந்தநாள் கேக் வாங்கி உள்ளார். அவர் வாங்கிய கேக்குக்கு கூகுள் பே மூலம் அனுப்புவதாக தெரிவித்து கூகுள் பே சரியாக வேலை செய்யவில்லை எனக் கூறி வீட்டிற்கு சென்று பின்னர் அனுப்புவதாக அவருடைய செல்போன் எண் கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.
கடை உரிமையாளர் அவருக்கு தொலைபேசி மூலம் கடந்த ஒரு மாதமாக ரூ1000 கேட்டு போன் செய்து வந்துள்ளார். ஆனால் ராஜேஷ் ரூ1000 தன்னிடமா கேட்கிறாய் நீ அங்கு கடை வைத்து நடத்த முடியாது காலி செய்து விடுவேன் என போனில் மிரட்டல் விடுத்துள்ளார். இந்நிலையில் நேற்று மீண்டும் அதே கேக் கடைக்கு ரூ 1000 மதிப்பில் கேக்குக்கு ஆர்டர் செய்து அதை வாங்கி வருவதற்கு அவருடைய கூட்டாளியை அனுப்பி வைத்துள்ளார். ராஜேஷ் கடை உரிமையாளருக்கு போன் செய்து கேக்கை அவரிடம் கொடுத்து அனுப்புமாறு கூறியுள்ளார். ஆனால் கடை உரிமையாளர் ஏற்கனவே ரூ 1000 கேக் வாங்கியதற்கான பணம் தர வேண்டியது உள்ளது, அதனால் பணத்தை கொடுத்து கேக்கை பெற்று செல்லுங்கள் கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ் தனது நண்பரான புங்கத்தூர் பகுதியைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் நிர்வாகி ரவி மற்றும் நான்கு பேரை கடைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது ராஜேஷ் தனது கூட்டாளியான ரவியுடன் கடையின் கிளாஸ் டோரை திறந்து கொண்டு வந்து அநாகரிமான பேசி கல்லாப்பெட்டியை தள்ளிவிட்டு கடை உரிமையாளரான உமாகாந்தை இரண்டு முறை கையால் தாக்கியுள்ளார். தாக்குதல் முடிந்த பிறகு ராஜேஷ் ஏற்கனவே வாங்கியதற்கான கேக்குக்கான ரூ 1000 பணத்தில் ரூ 600 கொடுத்து தற்போது ஆர்டர் கொடுத்த கேக்கை இலவசமாக கேட்டுள்ளார். ஆனால் கடை உரிமையாளர் பணத்தைப் பெற்றுக் கொண்டு, ஏற்கனவே வாங்கிய கேக்குக்கான மீதி தொகை ரூ 400 தற்போது வாங்கக்கூடிய கேக்குக்கு ஆயிரம் என சேர்த்து ரூ1400 கேட்டுள்ளார்.
ஆனால் அந்த பணத்தை தர மறுத்த ராஜேஷ், தனது கூட்டாளியுடன் கடை உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றுள்ளார்.‘நாங்க லோக்கல் ஏரியா ஆள்... என்பதால் நீ எங்களுக்கு இலவசமாக கேக்கு தர வேண்டும் இல்லையென்றால் கடை இருக்காது’ எனக் கூறி மிரட்டி சென்றுள்ளனர். கடையில் தாக்குதல் நடத்திய சிசிடிவி வீடியோவை வைத்து கடை உரிமையாளர் திருவள்ளூர் டவுன் போலீசில் நேற்றைய தினம் புகார் அளித்துள்ளார். ஆனால் அவர் கொடுத்த புகாரை போலீசார் வாங்கிக்கொண்டு அவர் வழக்கறிஞர் என்பதால் எந்தவித விசாரணையும் செய்யாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடை உரிமையாளரை அதிமுக பிரமுகர் கூட்டாளிகளுடன் சென்று தாக்கும் சிசிடிவி காட்சிகள் செய்திகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டதால், அரை மணி நேரத்தில் போலீசார் அவருடைய கடைக்கு வருகை தந்து அவரிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தனர்.தாக்குதல் நடத்திய ராஜேஷ் சேலை முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவரும் வழக்கறிஞரும் அதிமுக பிரமுகரமாக செயல்பட்டு வருகிறார். தாக்குதல் நடத்திய புங்கத்தூர் ரவி மீது ஏற்கனவே கொலை முயற்சி வழக்கு நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!