கூகுள்-பே ஆப் வைத்திருந்தால் கவனம்.. வடமாநில கும்பல் புது மோசடி!

 
சச்சின்குமார்

சென்னை தரமணியை அடுத்த திருவேங்கடம் நகரில் வெங்கட் சாய் என்ற தங்கும் விடுதி உள்ளது. இங்கு வெளியூர்களில் இருந்து சென்னை வந்து படிக்கும் மாணவர்கள், பணிபுரியும் தொழிலாளர்கள் தங்கியுள்ளனர். இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு விடுதிக்கு சென்ற இளைஞர் ஒருவர் வெளியில் நின்று வெகு நேரமாக நோட்டமிட்டுள்ளார். பின்னர் முதல் தளத்திற்கு சென்று அங்கு அறையில் தங்கி இருந்தவர்களிடம் பேசியுள்ளார்.

அப்போது, நான் கீழ் தளத்தில் புதிதாக வந்து தங்கி இருக்கிறேன், என் எனது அப்பாவை மருத்துவமனையில் சேர்த்துள்ளேன், அவசரமாக மருத்துவ செலவுக்கு ரூபாய் 5000 பணம் அனுப்ப வேண்டும். எனது கையில் பணம் இல்லை, இந்த நேரத்தில் எனது கூகுள்-பே ஆப் லாக் ஆகி விட்டது. நீங்கள் கூகுள்-பே வில் பணம் அனுப்பினால் நன் ஏடிஎம்யில் பணத்தை எடுத்து உங்களுக்கு தருகிறேன் என்று பேசியுள்ளார். 

சச்சின்குமார்

இதனை நம்பிய அங்கிருந்த இளைஞர் ஒருவர், அந்த நபர் கூறிய வங்கி கணக்கில் ரூபாய் 5,000 அனுப்பியுள்ளனர் . ஆனால் அதன்பின்னர் அந்த இளைஞர் அங்கிருந்து சென்றுவிட்டார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்ட  அந்த நபர் சிறிது நேரத்தில் தங்கும் விடுதியில் வசிப்பவர்களை செல்போனில் தொடர்பு கொண்டு மருத்துவமனையில் உடனே அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் கூறுகின்றனர். அதற்கு ரூபாய் 40,000 ரூபாய் செலுத்த வேண்டுமாம், நான் ATM வாசலில் நிற்கிறேன். முன்னதாக அனுப்பிய அதே கூகுள்-பே விற்கு ரூபாய் 40,000 அனுப்பி விடுங்கள். பணத்தை உடனே எடுத்து வருகிறேன் என கூறி உள்ளார். அதையும் நம்பிய விடுதியில் தங்கி இருந்த நான்கு பேர் ரூபாய் 40,000 அனுப்பி உள்ளனர்.

அதன்பின்னர், வெகுநேரமாகியும் அந்த இளைஞர் வராததால் பணம் கொடுத்தவர்கள் விசாரித்துள்ளனர். அப்போதுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதையும் உணர்ந்துள்ளனர். மேலும் சிசிடிவி காட்சிகளுடன் தரமணி காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர்.

சச்சின்குமார்

விசாரணையில் மற்றொரு அதிர்ச்சி தகவலும் வெளிவந்தது. அதாவது, அந்த விடுதியில் முதலில் மேல் தளத்துக்கு சென்று பணத்தை கேட்டவர், அதேபோன்று அப்பா.. மருத்துவமனை.. கூகுல் பே லா.. போன்ற டயலாக்களை பேசி கீழ் தளத்தில் இருந்தவர்களிடமும் பணம் பறித்து தெரியவந்தது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாலை தரமணியில் உள்ள மற்றொரு விடுதிக்கு சென்ற அந்த இளைஞர்  அதேபோல் பேசி மோசடி வலைவிரித்து பணம் பறிக்க முயன்றுள்ளார். அங்கிருந்தவர்கள் சுதாரித்துக்கொண்டு அவரை பிடித்து தரமணி காவல் நிலையத்தில்  ஒப்படைத்தனர்.

போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த 22 வயதான சச்சின்குமார் என்பதும் அவருடைய கூகுள்-பே வங்கி கணக்கை சோதனை செய்தபோது, இதேபோன்று பலரிடம் பொய்யாக பேசி மோசடி செய்து பலரை ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் சச்சின்குமார் மீது வழக்கு பதிவு செய்த தரமணி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web