10 வருஷத்துக்கு மேல் வசித்தால் புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா... தமிழக அரசு அதிரடி!

சென்னை செனாய் நகரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 2,500 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கும் விழா நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய வருவாய்த்துறை கூடுதல் செயலாளர் அமுதா ஐஏஎஸ், “ஆட்சேபமற்ற புறம்போக்கு நிலங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கும் திட்டம் விரைவில் கொண்டு வரப்பட உள்ளது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் சுமார் 7 லட்சம் குடும்பங்கள் பயனடைய உள்ளனர்.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் இதுவரை 80000 பேருக்கு மேல் பட்டா வழங்கப்பட்டுள்ளது. 20 - 30 ஆண்டு காலமாக இருந்த இடத்திற்கு பட்டா இல்லாமல் குடியிருந்த வீட்டை எந்த வகையிலும் பயன்படுத்த முடியாத மக்களுக்கு எல்லாம் பட்டா வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார்” என்றார்.
இவருக்கு பிறகு பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “திராவிட மாடல் அரசு என்றால் என்ன என்று சிலர் கேட்கின்றனர். அவர்களுக்கு இங்கே பதில் சொல்கிறேன். இன்னாருக்கு மட்டும் இது என்று இருந்ததை எல்லோருக்கும் எல்லாம் என்பது தான் திராவிட மாடல் அரசு. இந்த இலக்கை நோக்கியே முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பட்டா இல்லாத 63000 மக்களுக்கு 6 மாதத்தில் பட்டா வழங்க வேண்டும் என அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் வலியுறுத்தி, இதற்காக ஒரு குழுவும் அமைத்து இருந்தார்.
சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள 4 மாவட்டங்களில் மட்டும் 29 ஆயிரத்து 187 பேருக்கு பட்டா வழங்கப்பட உள்ளது. மதுரை, நெல்லை மாவட்டங்கள், மாவட்ட தலைநகர பகுதிகளில் மட்டும் 57 ஆயிரத்து 84 பேருக்கு பட்டாக்கள் வழங்கப்பட உள்ளது. ஏறத்தாழ 86,000 பட்டாக்களை வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கூட்டத்தில் அறிவித்துள்ளார். இது தமிழ்நாட்டின் வரலாற்றில் நிலைத்து நிற்கப் போகின்ற ஒரு நடவடிக்கை.
இதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை. தமிழ்நாட்டில் அனைவருக்கும் முகவரி கொடுத்த இயக்கம் திராவிட இயக்கம். திராவிட இயக்கம் இல்லாமல் போயிருந்தால் முகவரி இல்லாமல் கல்வி வேலை வாய்ப்பற்ற மனிதர்களாகத்தான் இருந்திருப்போம்” என்றார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!