புற்றுநோய் ஆராய்ச்சியில் புதிய மைல் கல்… சென்னை ஐஐடி மரபணு தரவுதளம் வெளியீடு!
புற்றுநோய் விழிப்புணர்வு, கண்டறிதல் மற்றும் சிகிச்சையை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் பிப்ரவரி 4 ‘உலக புற்றுநோய் தினம்’ அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை ஐஐடி வளாகத்தில் இந்தியாவிலேயே முதல்முறையாக புற்றுநோய் மரபணு தரவுத்தளம் வெளியிடப்பட்டது. இந்த தகவலை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி வெளியிட்டார்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தேசிய புற்றுநோய் பதிவேட்டுத் திட்டத்தின் படி ஒன்பது பேரில் ஒருவருக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஆண்டுதோறும் பாதிப்பு 12.8 சதவீதம் வரை உயர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இடைவெளியை நிரப்ப சென்னை ஐஐடி 2020-ல் ‘பாரத் புற்றுநோய் மரபணு திட்ட’ மையத்தை தொடங்கியது. ஹூண்டாய் நிறுவனம் சமூகப் பொறுப்புத் திட்டத்தின் மூலம் ஆதரவு வழங்கியது. லுகேமியா, பெருங்குடல், கணையப் புற்றுநோய் நோயாளிகளின் மரபணு தகவல்கள் சேகரிக்கப்பட்டு, ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் பயன்படுத்தும் வகையில் https://bcga.iitm.ac.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இந்த மையம் பரிசோதனை மற்றும் தடுப்பு முகாம்களையும் நடத்தி வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
