ஐஐடி மாணவர் மெட்ரோவில் பாய்ந்து தற்கொலை முயற்சி... !

 
மெட்ரோ

பெருநகரங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நாடு முழுவதும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.  அந்த வகையில் தலைநகர் டெல்லி  இயக்கப்பட்டு வரும் மெட்ரோவில் அடிக்கடி சர்ச்சை நிகழ்வுகள் ஏற்பட்டு பெரும் பேசுபொருளாகி வருகின்றன. நேற்று மாலை 6.40க்கு திலக் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில்  பயணிகள் ரயிலுக்காக காத்திருந்தனர்.  2வது நடைமேடையில் துவாரகா நோக்கி சென்ற மெட்ரோ ரயில் ஒன்று நடைமேடைக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர் திடீரென ரயில் முன் பாய்ந்துவிட்டார். இதனால் அவருக்கு   தலையில் படுகாயம் ஏற்பட்டது.

டெல்லி மெட்ரோ
 அருகில் இருந்த  சக பயணிகள்   உடனடியாக அவரை  மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும், ரயில்வே போலீஸார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.   மாணவரின் உடைமைகளை பரிசோதனை செய்யப்பட்டதில் அவர் ஒரு  ஐஐடி மாணவர் என்பது தெரியவந்தது.  இருப்பினும் அவர் யார்? எதற்காக ரயில் முன் பாய்ந்தார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 அக்டோபர் மாதம் 35 வயது வங்கி ஊழியர் ஒருவர் மெட்ரோ ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

மெட்ரோ

இதேபோல் 31 வயது நூலகர் ஒருவர் மெட்ரோ ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். மெட்ரோ ரயிலில் இது போன்ற சம்பவங்கள் தொடர்கின்றன. இச்சம்பவங்கள்   மெட்ரோ ரயில் பயணிகள் இடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.  மாணவர் ரயில் முன் பாய்ந்த சம்பவத்தால் சுமார் 10 நிமிடங்களுக்கு மேல் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும்  மெட்ரோ ரயில் 10 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது.   மெட்ரோ ரயில் ஓட்டுநர் உடனடியாக சமயோசிதமாக அவசரகால பிரேக்குகளை பயன்படுத்தியதால் மாணவர் படுகாயங்களுடன் உயிர்த்தப்பியுள்ளார்.  இது குறித்து மெட்ரோ ரயில் ஓட்டுனரிடம்  தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

மார்கழி மாத குளிர்... சளி, இருமலை விரட்ட இதைச் செய்தாலே போதும்!

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web