ஐஐடியில் 5 ஆண்டுகளில் 65 மாணவர்கள் தற்கொலை... அதிர்ச்சி தரும் ஆய்வறிக்கை!

 
ஐஐடி

இந்தியாவின் பல ஐஐடி கல்வி நிறுவனங்களில் படித்த 65 மாணவர்கள், 2021 ஜனவரி முதல் 2025 டிசம்பர் வரை தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 12 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 28 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்; இதில் கான்பூர் ஐஐடியில் ஒன்பது, காரக்பூர் ஐஐடியில் ஏழு, டெல்லி, ரூர்க்கி, குவஹாத்தி ஐஐடிகளில் தலா மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர்.

ஐஐடி

விளைவாக கல்வி அழுத்தம், தனிமை, போட்டி, சாதி மற்றும் மொழித் பாகுபாடுகள் மாணவர்களை மன அழுத்தத்திற்கு ஆழ்த்துகின்றன. இந்த தொடர்ச்சியான உயிரிழப்புகளை தடுப்பதற்காக உச்ச நீதிமன்றம் உயர் மட்ட 'பணிக்குழு' ஒன்றை அமைத்துள்ளது.

ஐஐடி

இந்த குழு மாணவர்களின் மனநல பாதுகாப்பையும், வளாகங்களில் நிலவும் அழுத்த சூழலை குறைப்பதற்கான வழிமுறைகளையும் ஆராயும். முன்னாள் ஐஐடி மாணவர்கள் குழு, உயர் மட்ட நிர்வாகம் தற்கொலைகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!