அஜந்தா–எல்லோரா திரைப்பட விழாவில் இளையராஜாவுக்கு பத்மபாணி விருது!
இசைஞானி இளையராஜாவுக்கு அஜந்தா–எல்லோரா சர்வதேச திரைப்பட விழாவின் உயரிய விருதான பத்மபாணி விருது வழங்கப்பட உள்ளது. 11-வது அஜந்தா–எல்லோரா திரைப்பட விழா ஜனவரி 28 முதல் பிப்ரவரி 4 வரை மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகரில் நடைபெறுகிறது. இந்த விழாவின் தொடக்க நாளில் இளையராஜாவுக்கு விருது வழங்கப்படும்.
The Padmapani Award at AIFF 2026 will be conferred upon Maestro Ilaiyaraaja, honouring a legacy that has shaped Indian cinema through music.
— aiff_official_ (@aeiffest) January 18, 2026
An evening of tribute at the festival opening ceremony.#PadmapaniAward #AIFF2026 #Ilaiyaraaja #IndianCinema #FilmMusic pic.twitter.com/SmM7gN8cu4
விழா ஏற்பாட்டுக் குழு தலைவர் நந்த்கிஷோர் கக்லிவால், தலைமை ஆலோசகர் அங்குஷ்ராவ் கதம் மற்றும் இயக்குநர் அசுதோஷ் கோவாரிகர் ஆகியோர் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டனர். தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அசுதோஷ் கோவாரிகர், விமர்சகர் லத்திகா பட்கோங்கர், சுனில் சுக்தங்கர், சந்திரகாந்த் குல்கர்னி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இந்த விருதுடன் விருது சிற்பம், பாராட்டு பத்திரம் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது. ஐந்து தசாப்தங்களுக்கும் மேலான இசைப் பயணத்தில் 1,500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜா, 7,000க்கும் அதிகமான பாடல்களை உருவாக்கியுள்ளார். எட்டு நாள் நடைபெறும் இந்த விழாவில் 70க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
