இளங்காத்து வீசுதே.. அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

 
கன மழை

மக்களே குடையை எடுக்காமல் வெளியே கிளம்பாதீங்க. அடுத்த மூணு மணி நேரத்தில் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக அறிவித்துள்ளது. தற்போது நிலவி வரும் வளி மண்டல கீழடுக்கு காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.  கடந்த இரு தினங்களைப் போலவே இன்றும் சென்னையில் 3வது நாளாக காலையில் லேசான மழை பெய்தது. 

மழை

இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது.

மழை

சென்னையில்  அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த ஓரிரு நாட்களாக பெய்து வரும் மழையால்,  கோடை வெப்பம் சற்று தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இதனால், வெயிலின் தாக்கம் பெருமளவில் குறைந்துள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web