தமிழ்நாடு அரசு சார்பில் இசைஞானி இளையராஜாவுக்கு பிரம்மாண்ட வரவேற்பு!

இசைஞானி இளையராஜா லண்டனில் தனது முதல் சிம்பொனி அரங்கேற்றத்துக்கு பிறகு இன்று மார்ச் 10ம் தேதி திங்கட்கிழமை சென்னை திரும்பியுள்ளார். விமான நிலையத்தில் இசைஞானி இளையராஜாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் இளையராஜாவை தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு, பாஜக சார்பில் கரு.நாகராஜன், விசிக சார்பில் வன்னியரசு ஆகியோர் அவரை வரவேற்றனர்.
அரசியல் கட்சியினர் மட்டுமின்றி, திரைத்துறையினரும், ரசிகர்களும் திரண்டிருந்தனர். அப்போது பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி இந்திய நாட்டிற்கே பெருமை சேர்த்துள்ளார் இளையராஜா. முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் அவரை வரவேற்க வந்திருக்கிறேன். மிகப் பெரிய உலக சாதனையை நிகழ்த்தி தாய் மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார் இளையராஜா என்றார்.
உலகின் மிகச் சிறந்த பில்ஹார்மோனிக் இசைக் குழுவுடன் இணைந்து இளையராஜா சிம்பொனியை அணைமையில் அரங்கேற்றினார். இதன்மூலம் சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்த முதல் இந்தியர் என்ற பெருமைக்கு உரியவரானார் இசைஞானி இளையராஜா.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!