ஐந்து தசாப்தங்களாக திரையுலகை இசையால் ஆளும் இசைஞானி இளையராஜா... அண்ணாமலை நெகிழ்ச்சி!

இசைஞானி இளையராஜா மார்ச் 8 ம் தேதி லண்டன் நகரில் முதல் நேரடி சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளார். இந்நிலையில் அவரை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இசை இறைவனுடன் ஒரு சந்திப்பு.
— K.Annamalai (@annamalai_k) March 5, 2025
ஐந்து தசாப்தங்களாக திரையுலகை இசையால் ஆளும் இசைஞானி இளையராஜா அவர்கள், “வேலியன்ட்” எனும் தலைப்பில் உருவாக்கிய தனது முதல் சிம்பொனியின் நேரடி நிகழ்ச்சியை, லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் வருகிற மார்ச் 8 அன்று அரங்கேற்ற உள்ளதை முன்னிட்டு, மரியாதை… pic.twitter.com/Jg2ZKEhNZU
இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், “இசை இறைவனுடன் ஒரு சந்திப்பு. ஐந்து தசாப்தங்களாக திரையுலகை இசையால் ஆளும் இசைஞானி இளையராஜா வேலியன்ட்” எனும் தலைப்பில் உருவாக்கியுள்ளார்.
தனது முதல் சிம்பொனியின் நேரடி நிகழ்ச்சியை, லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் மார்ச் 8 அன்று அரங்கேற்ற உள்ளதை முன்னிட்டு, மரியாதை நிமித்தமாக அவரைச் சந்தித்து வாழ்த்து கூறி மகிழ்ந்தேன். நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேற, தமிழக பாஜக சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!