இளையராஜாவின் சிம்பொனி மே 30ம் தேதி சென்னையில்!
இசையமைப்பாளர் இளையராஜா லண்டனில் அரங்கேற்றிய தனது சிம்பொனி இசையை சென்னையிலும் நிகழ்த்துவதாக அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் அவர் ‘வெலியண்ட்’ எனப் பெயரிட்ட சிம்பொனியை லண்டனில் மேடையேற்றினார். அந்த நிகழ்ச்சி பெரும் வரவேற்பைப் பெற்றது.

சிம்பொனி இசைக்குப் பிரபலமான Royal Philharmonic Orchestra அவரது இசைக் குறிப்புகளை வாசித்து பார்வையாளர்களை கவர்ந்தது. இதன் மூலம் சிம்பொனியை எழுதி சர்வதேச அரங்கில் அரங்கேற்றிய ஆசியாவின் முதல் இசையமைப்பாளர் என்ற பெருமையை இளையராஜா பெற்றார்.

இப்போது அந்த சிம்பொனி இசையை பொதுமக்கள் கேட்க சென்னையில் மே 30ஆம் தேதி நிகழ்த்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு இசை ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சியை நேரில் கேட்க பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
