இன்று பெங்களூருவில் இளையராஜாவின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி.. ரசிகர்கள் உற்சாகம்!
இன்று பெங்களூருவில் இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில், பல்வேறு நகரங்களில் இருந்தும் பெங்களூருவில் இசை ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.
'அன்னக்கிளி' திரைப்படம் மூலம் 1976ம் ஆண்டு இசையமைப்பாளராக அறிமுகமான இசைஞானி இளையராஜா, தமிழ் சினிமா மட்டுமின்றி பல மொழிகளிலும் தனக்கெனத் தனிச் சாம்ராஜ்ஜியத்தை நிறுவி உள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உட்படப் பல்வேறு மொழிகளில் 1,500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 8,500-க்கும் அதிகமான பாடல்களுக்கு அவர் இசையமைத்துப் பெரிய சாதனை படைத்துள்ளார். அண்மையில் லண்டனில் தனது கனவுப் படைப்பான 'வேலியண்ட்' சிம்பொனியை அரங்கேற்றியும் அவர் உலக சாதனை படைத்திருந்தார்.
இசைப் பயணத்தில் 50 பொன் விழா ஆண்டுகளைக் கடந்துள்ள இளையராஜாவுக்கு, சமீபத்தில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழக அரசின் சார்பில் பாராட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. தற்போது படங்களுக்கு இசையமைப்பது குறைந்திருந்தாலும், அவ்வப்போது அவர் நடத்தும் இசைக் கச்சேரிகள் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்துகின்றன. அந்த வகையில், தற்போது பெங்களூரு ரசிகர்களை மகிழ்விக்க அவர் தயாராகி உள்ளார்.
இளையராஜாவின் இந்த 50 ஆண்டு இசைப் பயணத்தை, அக்சய பாத்ரா அறக்கட்டளையின் வெள்ளி விழாவுடன் இணைந்து ஒரு சிறப்பு இசை நிகழ்ச்சியாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பிரமாண்ட இசை நிகழ்ச்சி இன்று ஜனவரி 10ம் தேதி பெங்களூரு மாதவராவில் உள்ள நைஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இசை ரசிகர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெங்களூருவில் குவிந்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
