இளையராஜா பாடல்கள் அவருக்கே சொந்தம்" - இயக்குனர் ஆர்.கே.செல்வமணி சாட்சியம்!
திரையுலகின் 'இசைஞானி' இளையராஜா அவர்களுக்கும், மியூசிக் மாஸ்டர் உள்ளிட்ட இசை நிறுவனங்களுக்கும் இடையே நீண்டகாலமாக நடைபெற்று வரும் பாடல்களின் காப்புரிமை தொடர்பான வழக்கு, தற்போது முக்கியத் திருப்பத்தை எட்டியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கில், திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் சங்கத்தின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி இன்று இளையராஜாவுக்கு ஆதரவாகச் சாட்சியம் அளித்தது பெரும் பலமாகப் பார்க்கப்படுகிறது.
"இளையராஜா தனது பாடல்களின் முழுமையான காப்புரிமையை ஒருபோதும் தயாரிப்பாளர்களுக்கு வழங்கியதே இல்லை. அந்தப் பாடல்கள் என்றென்றும் அவருக்கே சொந்தம்" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். தயாரிப்பாளர்களுக்கு அவர் வழங்கியது அந்தந்தத் திரைப்படங்களில் அந்தப் பாடல்களைப் பயன்படுத்திக் கொள்ளும் உரிமையை (Usage Rights) மட்டுமே தவிர, பாடலின் முழு உரிமையையும் அல்ல என்று விளக்கினார்.

கடந்த 2010-ஆம் ஆண்டு 'பாண்டியன்', 'தேவர் மகன்', 'குணா' உள்ளிட்ட 109 படங்களின் இசை உரிமையைத் தாங்கள் பெற்றிருப்பதாக மியூசிக் மாஸ்டர் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. 1997-ல் போடப்பட்ட ஒப்பந்தங்கள் வெறும் ஆடியோ கேசட்கள் தொடர்பானவை மட்டுமே. அப்போது யூடியூப் போன்ற சமூக வலைதளங்கள் கிடையாது என்பதால், டிஜிட்டல் உரிமையை யாரும் கோர முடியாது என்பது இளையராஜா தரப்பு வாதம். இன்றைய சாட்சியங்களைத் தொடர்ந்து, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை நீதிமன்றம் ஜனவரி 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
