சென்னையில் இளையராஜாவின் 'சிம்பொனி'.. மே 30ல் ரசிகர்களுக்கு இசை விருந்து!

 
இளையராஜா பாடலுக்கு புதிய ஆப் அறிமுகம்!!

உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் இளையராஜா, லண்டனில் அரங்கேற்றி சாதனை படைத்த தனது சிம்பொனி இசையை முதன்முறையாகச் சென்னையில் நிகழ்த்தப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் லண்டனில் உள்ள புகழ்பெற்ற அரங்கில் இளையராஜா தனது சிம்பொனியை அரங்கேற்றினார். தான் உருவாக்கிய இந்தச் சிம்பொனி இசைக்கு 'வெலியண்ட்' என்று அவர் பெயரிட்டிருந்தார். சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சிம்பொனி இசையைக் குறிப்புகளாக எழுதி, அதனை ஐரோப்பிய இசைக் கலைஞர்களைக் கொண்டு அரங்கேற்றிய ஆசியாவின் முதல் இசையமைப்பாளர் என்ற வரலாற்றுச் சாதனையை இதன் மூலம் இளையராஜா படைத்தார்.

இளையராஜா

லண்டனில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் உலகத்தரம் வாய்ந்த 'ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ரா' குழுவினர் இளையராஜாவின் இசைக் குறிப்புகளை வாசித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினர்.

சர்வதேச அரங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த இசை அதிசயத்தைத் தமிழக மக்களும் கண்டுகளிக்க வேண்டும் என்ற நோக்கில், வரும் மே 30-ஆம் தேதி சென்னையில் இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இளையராஜா

இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே இசை ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ஒரு தமிழ் இசையமைப்பாளர் உலக அரங்கில் நிகழ்த்திய சாதனையைத் தனது சொந்த மண்ணில் மீண்டும் அரங்கேற்றுவது இசைத் துறைக்குக் கூடுதல் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!