இளையராஜாவுக்கு செக்.... நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Saregama நிறுவனத்திடம் உள்ள 134 திரைப்படப் பாடல்களை இசையமைப்பாளர் இளையராஜா பயன்படுத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. 1976 முதல் 2001 வரை அவர் இசையமைத்த பாடல்களின் நிரந்தர காப்புரிமை தயாரிப்பாளர்களிடமிருந்து தங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது என்று Saregama நிறுவனம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு இசைத்துறையில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த பாடல்கள் தங்களுக்கு சொந்தம் என கூறி, டிஜிட்டல் தளங்களில் இளையராஜா பதிவேற்றியது சட்டவிரோதம் என்று Saregama தரப்பு வாதிட்டது. இந்த வாதத்தை முதற்கட்டமாக நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இதனால் அந்த பாடல்களை பயன்படுத்துவதிலும் வெளியிடுவதிலும் தற்காலிக தடை அமலுக்கு வந்துள்ளது.

இந்த உத்தரவு காப்புரிமை தொடர்பான விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது. வழக்கின் இறுதி தீர்ப்பு வரும் வரை இந்த தடை நீடிக்கும் என கூறப்படுகிறது. இதனால் அந்த காலகட்டத்தில் உருவான பாடல்களின் உரிமை குறித்து இசைத்துறையில் மேலும் விவாதம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
