நீலகிரியில் 76 சட்டவிரோத விடுதிகளுக்கு சீல்!
நீலகிரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கும் 920 தங்கும் விடுதிகளில் 76 விடுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உதகை, கொடைக்கானல் பகுதிகளில் அனுமதியின்றி செயல்படும் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விசாரணையின் போது மாவட்ட வருவாய் அலுவலர் அறிக்கை தாக்கல் செய்தார். அதில் 920 விடுதிகளில் 844 விடுதிகளுக்கு சீல் வைக்க இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுவரை 76 விடுதிகள் மூடப்பட்டுள்ளன. மீதமுள்ள விடுதிகளின் கட்டட உரிமை உள்ளிட்ட ஆவணங்கள் பரிசீலனையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுதிகளை உள்ளூர் சேர்ந்த 521 பேரும், வெளியூரை சேர்ந்த 399 பேரும் நடத்தி வந்தது தெரியவந்துள்ளது. புதிய கட்டடங்களுக்கு அனுமதி வழங்கும் விதிகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என சம்பந்தப்பட்ட துறைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
