கள்ளக்குறிச்சியில் மீண்டும் கள்ளச்சாராயம்.... பால் கேனில் மறைத்து வைத்து விற்பனை!

 
கள்ளச்சாராயம்
அட பாவிகளா... திருந்தவே மாட்டீங்களா? மக்கள் உசுரோட விளையாடுறதையே வேலையா வெச்சிருக்கீங்களே? என்று பதை பதைக்க வைக்கிறது. அத்தனை உயிர்களைக் காவு வாங்கி, நாடு முழுவதுமே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகளை அத்தனை எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அடுத்தடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களால் கள்ளக்குறிச்சி மாவட்டமே சோகத்தில் மூழ்கியது. அரசு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரண தொகை அறிவித்திருந்தது. 

நிவாரண தொகை வழங்குவது மட்டுமா அரசின் பணி. அதற்கடுத்து கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக அழிக்க வேண்டாமா? அதன் பின்னரும் பல மாவட்டங்களிலும் கள்ளச்சாராயம் காய்ச்சுவதும், விற்பனையில் ஈடுபடுவதும், போலீசார் கைது செய்வதும் தொடர்கதையாகவே இருந்து வருகிறது.

கள்ளக்குறிச்சி மருத்துவமனை

இந்நிலையில் பெரும் அதிர்ச்சியளிக்கும் விதமாக கள்ளக்குறிச்சி சங்கராபுரத்தை அடுத்த கானாங்காடு கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, சங்கராபுரம் போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினார்கள்.

கள்ளக்குறிச்சி சங்கராபுரம்

போலீசாரின் சோதையில் அதே கிராமத்தைச் சேர்ந்த ஜான்சன் (26) என்பவர் பால் கேனில் வைத்து கள்ளச்சாராயம் விற்பனை செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவரிடமிருந்து 12 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து  மேற்கொண்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web