நான் ஒரு போலீஸ், உன் முகத்திலேயே சிறுநீர் கழிப்பேன்... தம்பதியிடம் பெண் எஸ்.ஐ. ஆவேசம்... சர்ச்சை வீடியோ!
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில், போக்குவரத்து நெரிசலில் சிக்கிய பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், சாலையில் நின்ற தம்பதியினரை கடுமையாகவும் அநாகரிகமாகவும் திட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. “நான் ஒரு போலீஸ், உன் முகத்திலேயே சிறுநீர் கழிப்பேன்” என்று அவர் மிரட்டும் காட்சிகள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதிகாரப் பதவியை முன்வைத்து பேசப்பட்ட வார்த்தைகள் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளன.
मैडम दरोगा है, सुनिए कैसे धमका रही है...पीड़ित युवक सफाई दे रहा है. लेकिन मैडम सुनने को तैयार नहीं हैं.
— Priya singh (@priyarajputlive) December 29, 2025
देखिये, एक महिला सब-इंस्पेक्टर कैसे वर्दी का धौंस दिखा रही है. वीडियो यूपी के मेरठ की है. pic.twitter.com/xFbhlOI7nZ
அலிகார் மாவட்டத்தில் பணியாற்றும் ரத்னா ரதி என அடையாளம் காணப்பட்ட அந்த அதிகாரி, போக்குவரத்து நெரிசலில் அவரது கார் சிக்கியதால் ஆத்திரமடைந்ததாக கூறப்படுகிறது. முன்னால் நின்ற வாகன ஓட்டிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, எல்லை மீறும் வார்த்தைகளை பயன்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் கூடியிருந்தவர்கள் அதிர்ச்சியுடன் காட்சிகளை பதிவு செய்துள்ளனர்.
இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து காவல் துறையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் குவிகின்றன. பெண் எஸ்.ஐ.யின் நடத்தை குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விசாரணை முடிவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
