“மொத்த கோட்டையும் அழிச்சுடறேன்”.. பின்னவாங்கிய ஜாய் கிரிசில்டா... ஒரு வழியா ஜெயித்த மாதம்பட்டி ரங்கராஜ்!
மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிசில்டா இடையிலான தனிப்பட்ட மோதல், வணிக ரீதியான வழக்காக உருவெடுத்த நிலையில், இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாய் கிரிசில்டா தரப்பு ஒரு முக்கியமான உத்தரவாதத்தை அளித்துள்ளது.
மாதம்பட்டி ரங்கராஜ் தன்னைத் திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக ஜாய் கிரிசில்டா குற்றம் சாட்டி வந்தார். இந்த விவகாரத்தில், அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்ட பதிவுகளில் ரங்கராஜின் வணிக நிறுவனமான "மாதம்பட்டி பாகசாலா" பெயரையும், அதன் ஹேஷ்டேக்குகளையும் பயன்படுத்தியிருந்தார்.

இதனால் தங்கள் நிறுவனத்திற்கு சுமார் ₹11 கோடிக்கும் மேல் வணிக இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், ஒரு இயக்குநரின் தனிப்பட்ட விவகாரத்திற்காக நிறுவனத்தின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கக் கூடாது என்றும் கூறி மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கு இன்று நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஜாய் கிரிசில்டா தரப்பு வழக்கறிஞர், மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தின் பெயரை இணைத்துப் பதிவிடப்பட்ட அனைத்துப் பதிவுகளையும் இரண்டு வாரங்களுக்குள் நீக்கிவிடுவதாக நீதிமன்றத்தில் உறுதி அளித்தார்.

இருவருக்கும் இடையிலான தனிப்பட்ட பிரச்னைகளைச் சுமூகமாகத் தீர்க்க, ஓய்வுபெற்ற நீதிபதி அல்லது மூத்த வழக்கறிஞரை மத்தியஸ்தராக நியமிக்க நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணை வரும் பிப்ரவரி 9-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
