இன்று தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை!
தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், மழை ஒருபுறம் இருந்தாலும், வட தமிழகத்தின் சில மாவட்டங்களில் அதிகாலை வேளையில் லேசானது முதல் மிதமான பனிமூட்டம் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதே சமயம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதிகாலை நேரத்தில் லேசான பனிமூட்டம் நிலவும் என்றும், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மிதமான பனிமூட்டம் நிலவ வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும் (சுமார் 30°C - 31°C). அதிகாலை வேளையில் குளிர் சற்று அதிகரித்து, குறைந்தபட்ச வெப்பநிலை 20°C - 21°C வரை இருக்கக்கூடும்.

வங்கக்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. எனவே, ஆழ்கடலுக்குச் செல்லும் மீனவர்கள் வானிலை எச்சரிக்கைகளைக் கவனித்துச் செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
