மெச்சூர் இல்லாத காதல்.. காதலனின் முடிவால் காதலி தூக்கிட்டு தற்கொலை!

 
மைத்தீஸ்வரி

சென்னை வியாசர்பாடி மல்லிப்பூ காலனி எச். பிளாக் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சுரேஷ் (45). இவருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன். இதில் 2ஆவது மகள் மைத்தீஸ்வரி (18), பாரிமுனையில் உள்ள பாரதி ஆர்ட்ஸ் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.காம் படித்து வந்தார்.  

இந்த நிலையில், நேற்று முன்தினம் வழக்கம்போல சுரேஷ் மற்றும் அவரது மனைவி வேலைக்குச் சென்று விட்டார். பின்னர் காலை 11 மணியளவில் சுரேஷ், தனது மகளுக்கு போன் செய்துள்ளார். அவர் போனை எடுக்காததால், பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு கால் செய்து தனது மகளை பார்த்துவரும்படி கூறியுள்ளார். 

அதன்படி சென்ற பக்கத்து வீட்டுக்காரர், கதவை திறக்காததால் உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் ஹால் மின்விசிறியில் துப்பட்டாவால் மைத்தீஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

மைத்தீஸ்வரி

இதுகுறித்து சுரேஷ் மற்றும் அவரது மனைவிக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வீட்டுக்கு வந்து மகளின் உடலைப் பார்த்து கதறி அழுதனர். தகவல் அறிந்துசென்ற வியாசர்பாடி போலீசார், மைத்தீஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.  போலீசாரின் விசாரணையில், மைத்தீஸ்வரி கொடுங்கையூர் கண்ணதாசன் நகர் பகுதியைச் சேர்ந்த  பிரவீன் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். கடந்த மாதம் 10ஆம் தேதி பிரவீன், மைத்தீஸ்வரிக்கு போன்செய்து அவரை பார்க்க வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு மைத்தீஸ்வரி மறுத்துள்ளார்.

அப்போது பிரவீன், நீ வரவில்லை என்றால் நான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வேன் எனக்கூறி சண்டை போட்டுள்ளார். இருவருக்கும் தகராறு முற்றியது. சிறிது நேரத்தில், எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்று கடிதம் எழுதிவைத்துவிட்டு, பிரவீன் தற்கொலை செய்து கொண்டார். 

மைத்தீஸ்வரி

கடந்த மாதம் 10ஆம் காதலன் தற்கொலை செய்துகொண்ட அன்று மைத்தீஸ்வரியும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால் அவரது பெற்றோர் அவரை காப்பாற்றி அறிவுரை சொல்லி வீட்டில் இருக்க வைத்துள்ளனர். ஆனால் நேற்று முன்தினம் யாரும் இல்லாதபோது மைத்தீஸ்வரி தற்கொலை செய்து கொண்டுள்ளார். தன்னால்தான் காதலன் இறந்துவிட்டான் என்று எண்ணிய அவர், தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் கூறுகின்றனர். இப்படி  2கே கிட்ஸ் காதல் கதை சோகத்தில் முடிந்துவிட்டதால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியும் சோகமும் அடைந்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web