1,299 பணியிடங்கள்... தமிழ்நாடு காவல்துறையில் உடனடி வேலைவாய்ப்பு !

 
காவலர்கள்
 


தமிழ்நாடு காவல்துறையில்  1,299 எஸ்.ஐ. பணி இடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை  சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.அதன்படி, தாலுகாவில் 933 பணியிடங்கள், ஆயுதப்படையில் 366 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் ஏதாவது ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 1299 பணியிடங்களுக்கு ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் முடித்த 20 – 30 வயதுக்குள் இருப்பவர்கள் www.tnusrb.tn.gov.in  இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

மாத சம்பளம் :  ரூ.36,900 – ரூ.1,16,600 வரை 
விண்ணப்பிக்க கடைசி தேதி :ஏப்ரல் 7 முதல் மே 3 வரை  விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு : 53 SC & ST பற்றாக்குறை காலிபணியிடங்களின் விவரம் தகவல் சிற்றேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒதுக்கீடு:

துறை ஒதுக்கீடு தாலுகா மற்றும் ஆயுத படையில் தலா 20% காலி பணியிடங்கள்.
சார்ந்துள்ள வாரிசுதாரருக்கான ஒதுக்கீடு- மீதமுள்ள 80% காலிப்பணியிடங்களில் 10% (9% +13 விளையாட்டு ஒதுக்கீடு – மீதமுள்ள 80% காலிப்பணியிடங்களில் 10% (7%+3%) பற்றாக்குறை காலிப்பணியிடங்களுக்கு பொருந்தாது.
இந்த ஆட்சேர்ப்பு தமிழ்நாடு காவல்துறையில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், பொதுமக்களுக்கு சேவை செய்யவும் ஆர்வமுள்ளவர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு. தகுதியுள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்து இந்த தேர்வுக்கு தயாராக வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு  TNUSRB-ன் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web