திருப்பதி வரும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு... தேவஸ்தானம் வேண்டுகோள்!

 
திருப்பதி

திருப்பதி திருமலை வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் மலைப்பாதைகளில் சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.

திருப்பதி

இந்தச் சூழலில் வாகன ஓட்டிகள் அதிக விழிப்புடன் வாகனங்களை இயக்க வேண்டும். பக்தர்களுக்கு ஏற்படும் சிரமத்தைத் தவிர்க்க மலைப்பாதையை மூடாமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் பழுது பார்க்கும் பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே திருமலைக்கு வரும் பக்தர்கள் தங்கள் பயணத் திட்டங்களை மாற்றி, குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே தொடங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்!! திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை!!

சாலை புனரமைப்பு காரணமாக வாகன ஓட்டிகள் ஆங்காங்கே குறுகிய நிறுத்தங்களுடன் மெதுவாக பயணிக்க வேண்டியிருக்கும் என்பதை பக்தர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். பயணத்தை பக்தர்களுக்கு எளிதாகவும், வசதியாகவும் மாற்றுவதற்காக தேவஸ்தானம் சாலை புனரமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது