பெரும் சறுக்கல்.. டாப்10 லிஸ்ட்ல அதானி கிடையாது! ஆசியாவின் பணக்காரராக முதலிடத்திற்கு முந்தினார் முகேஷ் அம்பானி!

 
adani

அபரிமிதமான வளர்ச்சி. எட்டுக்கால் பாய்ச்சல் என்று பொருளாதார பத்திரிக்கைகள் அதானியின் வளர்ச்சியை வானாளவி புகழ்ந்து தள்ளின. உலக பணக்காரர்கள் பட்டியலில் அடுத்தடுத்து முன்னேறினார். டாப் 10 லிஸ்ட்ல வர்றதே கஷ்டம். ஆனால், அதானியின் முதலீடுகள் அவர், தூங்கி கொண்டிருக்கும் போது கூட அவருக்கு கோடி கோடியாய் சம்பாதித்து தந்து கொண்டிருந்தன. முதல் இடத்துக்கு வருவதெல்லாம் அப்புறமா இருக்கட்டும்.. தலைமுறை தலைமுறையாய் லிஸ்ட்ல இருப்பவர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி  முன்னேறிய அதானி, கடந்த மூன்று நான்கு நாட்கள் வர்த்தகத்திலேயே உலக பணக்காரர்களின் பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டார். அத்தனை நஷ்டம்.

ஏழாவது இடத்துக்கு சறுக்கியவர் இப்போ லிஸ்ட்லேயே கிடையாது. 9வது இடத்தில் முகேஷ் அம்பானி முன்னேறி இருக்கிறார். இதன் மூலமாக ஆசியாவின் பணக்காரராக முகேஷ் அம்பானி திகழ்கிறார். இது பொருளாதாரத்தில் சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கான ரேஸ். அமெரிக்காவின் முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், கடந்த 2 ஆண்டாக நடத்திய ஆய்வில் இந்திய தொழிலதிபர் கவுதம் அதானியின், அதானி குழுமம் பங்குச்சந்தையில் வரலாறு காணாத மோசடிகளை செய்துள்ளதாக குற்றம்சாட்டியது. இந்த மோசடி மூலம் ரூ.17.80 லட்சம் கோடி முறைகேடாக செய்ததாகவும் பல்வேறு ஆதாரங்களுடன் அறிக்கை வெளியிட்டது.

கடந்த 24ஆம் தேதி வெளியான இந்த அறிக்கையால் அதானி குழுமத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. அவரது சொத்து மதிப்பு கடுமையாக சரிந்தது. இதனால் உலக பணக்காரர்கள் பட்டியலில் அடுத்தடுத்து இறக்கம் கண்டார். 

adani

முன்னதாக, கவுதம் அதானிக்கு சொந்தமான நிறுவனப் பங்குகள் கடந்த 2021, 2022ஆம் ஆண்டுகளில் அபரிமிதமான வளர்ச்சியை எட்டின. இதனால் உலகின் முதல் 10 கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதல் முறையாக கடந்த ஆண்டு நுழைந்தார். பின்னர் படிப்படியாக 2ஆம் இடம் வரை முன்னேறினார்.

இப்படி உச்சத்தில் இருந்த நிலையில்தான், அதானி குழும நிறுவன கணக்கு வழக்குகளில் பல்வேறு முறைகேடுகள் வெளிவந்துள்ளது. இதையடுத்து, அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு மளமளவென சரிந்தன. இதனால் கவுதம் அதானி யின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.2.9 லட்சம் கோடி சரிந்துள்ளது. அவரது இப்போதைய சொத்து மதிப்பு ரூ.6.9 லட்சம் கோடியாக உள்ளது.

அதானி சரிவு ஷேர்

இதனால் புளூம்பெர்க் நிறுவனத்தின் உலகின் முதல் 10 கோடீஸ்வரர்கள் பட்டியலில் இருந்து கவுதம் அதானி வெளியேறி உள்ளார். அவர் இப்போது 11ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

அதே நேரம், இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலிலும் அதானி முதலிடத்தில் கிடையாது. முகேஷ் அம்பானி தான் இப்போது இந்தியாவில் மட்டுமல்லாமல் ஆசியாவின் பணக்காரராக முதல் இடத்தில் உள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்!

From around the web