இம்ரான் கானுக்கு வலது கண்ணில் பார்வை இழப்பு? உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் வலது கண்ணில் பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னாள் கிரிக்கெட் வீரரும் கட்சியின் தலைவருமான இம்ரான் கான், ஊழல் வழக்கில் 2023 ஆகஸ்ட் 5-ஆம் தேதி கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.கடந்த மாதம் இஸ்லாமாபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்துச் செல்லப்பட்ட அவர், கண் தொடர்பான சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரது உடல்நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அவரது தரப்பு வழக்கறிஞர் சல்மான் சஃப்தாருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ராவல்பிண்டி சிறையில் இம்ரான் கானை சந்தித்த பின்னர் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும் தற்போது வலது கண்ணில் 15% பார்வை மட்டுமே உள்ளதாக இம்ரான் கான் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு வரை இரண்டு கண்களிலும் இயல்பான 6x6 பார்வை இருந்ததாகவும், பின்னர் பார்வை மங்கத் தொடங்கியதாகவும் அவர் தெரிவித்ததாக வழக்கறிஞர் கூறியுள்ளார்.
மேலும், ரத்த உறைவு காரணமாக கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், ஊசி உள்ளிட்ட சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும் வலது கண்ணில் பார்வை 15% மட்டுமே உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மற்றபடி அவர் நலமாக இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இந்த விவகாரத்தை தொடர்ந்து, இம்ரான் கானுக்கு விரிவான மருத்துவ பரிசோதனை நடத்த மருத்துவர்கள் குழுவை அமைக்கவும், அவரது குழந்தைகளுடன் பேச அனுமதி வழங்கவும் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
