“2019ல் அதிமுகவை அடகு வெச்சரு... 21ல் லீஸுக்கு விட்டவரு இப்போ முழுசாவே பாஜகவுக்கு வித்துட்டாரு” - உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்!

 
உதயநிதி இளைஞரணி மாநாடு

அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் கோவையில் நடைபெற்ற இந்த மேற்கு மண்டல திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து உதயநிதி ஸ்டாலின் ஆலோசனைகளை வழங்கினார்.

"2019-ல் அதிமுகவை பாஜகவிடம் எடப்பாடி பழனிசாமி அடகு வைத்தார். 2021-ல் லீசுக்கு விட்டார். இப்போது 2026-ல் முழுமையாக விற்றுவிட்டார்" என உதயநிதி விமர்சித்தார். சுயலாபத்திற்காக அதிமுகவை எடப்பாடி பழனிசாமி அழிவுப் பாதைக்குக் கொண்டு செல்வதாகவும், இன்று எம்ஜிஆர் உயிருடன் இருந்தால் இதைப் பார்த்து அழுவார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

உதயநிதி

பாஜகவின் கலவர அரசியலைத் தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் எனத் தெரிவித்த அவர், எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு ஒரு முரட்டு அடிமையாகச் செயல்படுவதாகச் சாடினார். மேற்கு மண்டலத்திலும் (West) திமுகதான் சிறந்தது (Best) என்பதை இந்தக் கூட்டம் நிரூபித்துள்ளது. வரும் தேர்தலில் கொங்கு மண்டலத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் திமுகவே வெற்றி பெறும்" எனத் தொண்டர்களிடையே உற்சாகமாகப் பேசினார்.

இந்திய அளவில் பாஜகவிற்கு எதிரான ஜனநாயகப் போரை முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடத்த வேண்டும் எனப் பிற மாநிலத் தலைவர்களே பேசத் தொடங்கிவிட்டதாக அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

உதயநிதி

அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையிலிருந்து மீண்டு வந்து கோவையில் ஒருங்கிணைத்துள்ள இந்த பிரம்மாண்டக் கூட்டம், மேற்கு மண்டல அரசியலில் திமுகவின் பலத்தைக் காட்டும் விதமாக அமைந்துள்ளது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், உதயநிதியின் இந்த 'விற்பனை' குறித்த விமர்சனம் அதிமுக வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!