2026-ல் 24 நாட்கள் அரசு பொது விடுமுறை... தமிழக அரசு அறிவிப்பு!
இயந்திர வாழ்க்கைக்கு நடுவே, பண்டிகை காலங்களில் கிடைக்கும் தொடர் விடுமுறையை மக்கள் சுற்றுலா செல்லவும், உறவினர்களுடன் இணைந்து பொங்கல், தீபாவளி போன்ற கொண்டாட்டங்களில் பங்கேற்கவும் பெரிதும் விரும்புவர். வேலை நிமித்தமாக வெளியூர்களில் வசிப்பவர்கள், விஷேச நாட்களில் சொந்த ஊருக்குக் கூட்டம் கூட்டமாகப் பயணிப்பார்கள். இந்த நிலையில், 2026ஆம் ஆண்டிற்கான அரசு பொது விடுமுறை நாட்களின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 2026ஆம் ஆண்டில் மொத்தம் 24 நாட்கள் அரசு பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மக்கள் தங்கள் பயணங்கள் மற்றும் சொந்த ஊர் கொண்டாட்டங்களை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ள ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்த 24 பொது விடுமுறைகள் தவிர, அரசு அலுவலகங்களுக்கு மாதத்தின் 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகளிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டு (ஜன. 1-வியாழன்), பொங்கல் (ஜன. 15-வியாழன்), குடியரசு தினம் (ஜன. 26-திங்கள்), ரம்ஜான் (மார்ச் 21-சனி), புனித வெள்ளி (ஏப்ரல் 3-வெள்ளி), மே தினம் (மே 1-வெள்ளி), மொஹரம் (ஜூன் 26-வெள்ளி), காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2-வெள்ளி), விநாயகர் சதுர்த்தி (செப். 14-திங்கள்), ஆயுத பூஜை (அக். 19-திங்கள்), விஜயதசமி (அக். 20-செவ்வாய்) மற்றும் கிறிஸ்துமஸ் (டிச. 25-வெள்ளி) போன்ற முக்கிய விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பல விடுமுறைகள் வெள்ளிக்கிழமை மற்றும் திங்கட்கிழமைகளில் வருவதால், வார இறுதி நாட்களுடன் சேர்த்துத் தொடர் விடுமுறை கிடைக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
