செம மாஸ்... .அரசு பள்ளிகளில் 14 நாட்களில் 1,06,028 மாணவர்கள் சேர்க்கை…!
தமிழ்நாடு முழுவதும் மொத்தமாக 37,553 அரசு பள்ளிகள் செயல்பாட்டில் உள்ளன. இந்த அரசு பள்ளிகளில் மார்ச் 1-ம் தேதி முதல் மாணவ சேர்க்கையை முதல்வரும், துணை முதல்வரும் தொடங்கி வைத்தனர். இதைத்தொடர்ந்து அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கைகள் நடைபெற்று வருகிறது.

அதிகபட்சமாக 1ம் வகுப்புக்கு தான் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுவதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இதில் மார்ச் 1 முதல் 20ம் தேதி வரை, மொத்தம் 14 பணி நாட்களில் மாணவ சேர்க்கை ஒரு லட்சத்தை கடந்திருப்பதாக கூறியுள்ளனர். குறிப்பாக நேற்று ஒரே நாளில் மட்டும் 8000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

அதன்படி இதுவரை நடப்பாண்டில் 14 நாட்களில் மொத்தமாக 1,06,268 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அரசு பள்ளிகளில் அதிகரிக்கும் நோக்கத்தில் பள்ளிக்கல்வித்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் 5 லட்சம் மாணவர்கள் சேர வேண்டும் என்ற இலக்கை நோக்கி முன்னேற வேண்டும் என ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
