"தமிழகத்தில் ஒவ்வொரு ரேஷன் கார்டு மீதும் ரூ.4 லட்சத்துக்கு மேல கடன் சுமை!" - திமுகவை கிழித்தெடுத்த அண்ணாமலை!
பாஜகவின் அரசியல் பயண நிறைவு விழாவில் உரையாற்றிய அண்ணாமலை, தமிழக அரசின் கடன் சுமை ஒவ்வொரு தனிமனிதனையும் பாதித்துள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
தமிழகத்தின் நிதி நிலைமை குறித்துப் பேசிய அண்ணாமலை, "தமிழகத்தில் தற்போது ஒரு ரேஷன் அட்டை மீதான கடன் சுமை ரூ.4 லட்சத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. திமுக அரசு தொடர்ந்து வாங்கி வரும் இந்தக் கடனை, நமது வருங்காலச் சந்ததியினர் தான் உழைத்துக் கட்ட வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. 500-க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக முதல்வர் பொய் சொல்கிறார். மேலும், திமுகவின் இணையதளத்திலிருந்து மாவட்ட வாரியாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நீக்கப்பட்டுள்ளதாக அவர் ஒரு புதிய புகாரையும் முன்வைத்தார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்று குறிப்பிட்ட அண்ணாமலை, "பெண்கள் அச்சமின்றி வீதிகளில் நடமாடக் கூடிய சூழல் தமிழகத்தில் இல்லை. பெண்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கும் காவல்துறைக்கே இங்குப் பாதுகாப்பு இல்லை. மத்திய அமைச்சர் அமித்ஷாவின் நடவடிக்கைகளால் இந்தியாவில் நக்சல்வாதம் முடிவுக்கு வந்துள்ளது. ஆனால், தமிழகத்தில் நிலைமை மோசமாக உள்ளது."
தமிழகம் முழுவதும் ஆட்சி மாற்றத்திற்கான குரல் ஒலிக்கிறது என்று கூறிய அவர், "டீக்கடை முதல் ஆட்டோ ஓட்டுநர்கள் வரை அனைவரும் ஆட்சி மாற்றத்தைப் பற்றி மட்டுமே பேசுகின்றனர். அடுத்த 90 நாட்கள் திமுக அரசின் அவலங்களை வீதி வீதியாகக் கொண்டு செல்ல வேண்டும். எப்படியாவது திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதே மக்களின் ஒற்றைக் குரலாக உள்ளது." என்றார்.

தமிழகத்தில் உள்ள முன்னணி நிறுவனங்கள் பக்கத்து மாநிலமான ஆந்திராவிற்குச் செல்வது ஏன்? என்று கேள்வி எழுப்பிய அண்ணாமலை, திமுக அரசின் தவறான கொள்கைகளே இதற்குக் காரணம் என்றும், பொங்கலுக்கு ஒரு ரூபாய் கூட தராத அரசு இது என்றும் விமர்சித்தார். அமித்ஷா பங்கேற்ற இதே மேடையில் அண்ணாமலை ஆற்றிய இந்த உரை, பாஜக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
