தமிழகத்தில் இரட்டை இலைக்கு மேலே தாமரை மலர்ந்தே தீரும்... பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சு!

 
நயினார் நாகேந்திரன்

பாஜகவின் சேலம் பெருங்கோட்டம் சார்பில் ஓமலூரில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு பேசுகையில், “பாஜக தொண்டர்கள் பேஸ்புக், எக்ஸ், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும். தற்போது காவல்துறை திமுக கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்கள் எப்படி வேண்டுமென்றாலும் வழக்குப்பதிவு செய்வார்கள். எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

நயினார் நாகேந்திரன்

முன்னாள் மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் 'பாத யாத்திரை' நடத்தி கட்சியை வளர்த்தார். அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' என்ற முறையில் பாத யாத்திரை நடத்தி கட்சியை வலுப்படுத்தினார்.

தமிழகத்தில் தாமரை மலர்ந்து தீரும். இரட்டை இலைக்கு மேலே தாமரை மலர்ந்தே தீரும். நாம் அமைத்துள்ள கூட்டணி வெற்றி கூட்டணி. மிகப்பெரிய கூட்டணி. ஒரு சிலர் சந்தர்ப்பவாத கூட்டணி என கூறுகிறார்கள். ஆனால் இதுதான் நியாயமான கூட்டணி. எனவே தேசிய ஜனநாயக ஆட்சி வருவதற்கு பக்கபலமாக இருக்க வேண்டும். பலர் இந்த கட்சிக்காக உயிரை தியாகம் செய்துள்ளனர்.

 நயினார் நாகேந்திரன்

ஆடிட்டர் ரமேஷ் போன்றவர்கள் தியாகம் செய்ததால் இந்த அளவுக்கு வளர்ந்துள்ளோம். இன்றிலிருந்து சபதம் ஏற்க வேண்டும். கூட்டணி வெற்றி பெற எத்தனை சீட் என்பதை நான் முடிவு செய்ய முடியாது. ஏன் என்றால் தேசிய தலைமை முடிவு செய்யும். தேசிய தலைமை ஜெ.பி.நட்டாவும், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியும் பேசி முடிவு செய்வார்கள்.

திமுக ஆட்சி பல்வேறு ஊழல்களை செய்துள்ளது. இதை மறைப்பதற்காக நீட் தேர்வு, மாநில சுயாட்சி எனவும், கடந்த 50 ஆண்டுகளாக மேகதாது பிரச்சனை, கச்சத்தீவு பிரச்சனை என வெறும் தீர்மானங்கள் மட்டுமே போட்டு விட்டு சென்று விட்டனர்” என்று பேசினார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web