சட்டசபையில் களேபரம்!! ஓபிஎஸ் பேச்சு... ஆவேசமாக கைநீட்டிய எடப்பாடி!!

 
இபிஎஸ்


 தமிழகத்தில் ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் தமிழக சட்டப் பேரவை கூடியது. இதில் மிகுந்த கனத்த இதயத்தோடு ஆரம்பிக்கிறேன் என முதல்வர்  ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை தாக்கல் செய்தார். ஏற்கனவே தடை செய்யப்பட்டதால் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா  இன்று மீண்டும் ஒருமனதாக நிறைவேறியது.  இது குறித்த  விவாதத்தில் ஓபிஎஸ் சை பேச  சபாநாயகர் அப்பாவு அனுமதி அளித்தார்.

இபிஎஸ்
 இந்த ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை இந்த மன்றம் விவாதமின்றி ஒருமனதாக ஏகமனதாக நிறைவேற்றி இருக்கலாம் என்ற கருத்தை பதிவு செய்தேன். ஆனால் இங்கே பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.  இருப்பினும்  ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை அதிமுக சார்பில் முழுமையாக வரவேற்று அமர்கிறேன்’ எனத் தெரிவித்தார்.
கடைசியாக ’அதிமுக சார்பில்’ எனப் பேசியதை கேட்டதும் எடப்பாடிக்கு ஆத்திரம் தலைக்கேறியது.  உடனே கையை நீட்டி இதையெல்லாம் ஏற்க முடியாது எனக்  கூறினார். உடனே அவர் எழுந்து பேசுகையில், ஒரு கட்சிக்கு ஒருவர் வீதம் பேச அழைத்தீர்கள். அதிமுக என்பது என்னுடைய அணி தான். நான் தான் எதிர்க்கட்சி தலைவர்.  எங்களின் சார்பில் உறுப்பினர் தளவாய் சுந்தரம் பேசிவிட்டார். அதன் பிறகு அவரை ஏன் பேச அழைத்தீர்கள்? பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.  அதற்குள் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பு எம்.எல்.ஏக்கள் அவையில் எழுந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சபாநாயகர் அப்பாவு நோக்கி காரசாரமாக கேள்விகளை எழுப்பினர்.

ஓபிஎஸ், இபிஎஸ் நியமனம் செல்லும்! ஐகோர்ட்டு அதிரடி!
 இதற்கு  பதிலளித்த சபாநாயகர், ’முன்னாள் முதல்வர் என்ற வகையில் பேச அனுமதி கேட்ட போது, நீங்கள் பேச முடியாது எனக் கூற முடியாது என விளக்கம் அளித்தார். உடனே இபிஎஸ்  இதெப்படி நியாயம்? என்னைப் பொறுத்தவரையில் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை பொறுத்து தான் நடக்கிறது. உடனே  சபாநாயகர் , ’பிரதான எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது’. அவர் கருத்தையும் அவர் பதிவு செய்யலாம். உங்கள் கருத்தையும் பதிவு செய்யுங்கள். இது மிக முக்கியமான மசோதா’ என பேசி சமாதானம் செய்தார். ஆனால் மனோஜ் பாண்டியன் எழுந்து, ’ஓபிஎஸ் எதிர்க்கட்சி துணைத் தலைவர். அவர் பேசத் தான் செய்வார்’ என ஆத்திரம் பொங்க கூறினார். அவருடன் வைத்திலிங்கமும் வாக்குவாதம் செய்யத் தொடங்கினார். இபிஎஸ் தரப்பில் பலரும் குரல் கொடுக்க ஆரம்பித்தனர். கே.பி.முனுசாமி எழுந்து வந்து சமாதானம் செய்தார். கடைசியில் எடப்பாடி தரப்பு எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தது. இந்த களேபரத்தில் சட்டப் பேரவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web