தவெக ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் அறிக்கை, 4 முக்கிய 4 தீர்மானங்கள்!
தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று (டிச.11) சென்னை பனையூரில் உள்ள தலைவர் செயலகத்தில் நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர் என். ஆனந்த், நிர்வாகக் குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டம் முடிவில் 4 முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைக்காகவும், தேர்தல் அறிக்கை தயாரிக்கவும் தனித்தனியாக சிறப்புக் குழுக்கள் அமைக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது. கூட்டணி தொடர்பான எந்த முடிவையும் எடுக்க தவெக தலைவர் விஜய்க்கு மட்டுமே முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியை அகற்றி புதிய தமிழகத்தை உருவாக்க வேண்டும் எனவும் தீர்மானங்கள் வலியுறுத்துகின்றன. சிறப்புக் குழுவில் சேர உள்ள உறுப்பினர்கள் குறித்து விவரம், தலைவர் விஜயுடன் நடைபெறும் ஆலோசனைக்குப் பிறகு அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
