நடுரோட்டில் லேடி கான்ஸ்டபிள் ஆடையைக் கிழித்து, பற்களால் கடித்து.. குடும்ப தகராறை விலக்கச் சென்ற போது விபரீதம்!

 
லேடி கான்ஸ்டபிள்
 

 

பாட்னாவில், புன்புன் மார்க்கெட் பகுதியில் இரு பெண்கள் குடும்பத் தகராறு காரணமாக அடித்துக் கொண்டிருப்பதாக காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. இது குறித்து விசாரிப்பதற்காக போலீஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.  அப்போது குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் லேடி கான்ஸ்டபிள் நேஹா குமாரியின் ஆடையைக் கிழித்து பற்களால் கடித்து காயப்படுத்தியுள்ளனர். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையை தீர்க்க சென்ற போது போலீசாருக்கு இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. அமைதியை நிலைநாட்ட சென்ற போலீசாரும் இந்த வன்முறை மோதலில் காயமடைந்தனர்.

 

இது குறித்து கான்ஸ்டபிள் நேஹா குமாரி கூறுகையில், “ராகுல் குமார் என்பவரின் மனைவி டிம்பிள் குமாரிக்கும் தகராறில் ஈடுபட்ட ஒருவருக்கும் இடையே கடுமையான சண்டை நடந்ததாகக் கிடைத்த புகாரின் பேரில் மற்ற காவல் துறை அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு நான் சென்றேன். டிம்பிள் குமாரி அந்த நபரைத் தாக்குவதைப் பார்த்து அதைத் தடுக்க முயன்றபோது, ​​​​நிலைமை எனக்கு எதிராக விரோதமாக மாறியது. நான் சண்டையைத் தடுத்து நிறுத்த தலையிட முயற்சித்த போதிலும், டிம்பிள் தொடர்ந்து என்னை ஆவேசமாக திட்டியபடியே போலீசார் இருப்பதை சிறிதும் பொருட்படுத்தாமல் தாக்க துவங்கினார். என்னுடைய உடைகளைக் கிழிந்து கடித்து பற்களால் காயம் ஏற்படுத்தினார்” என்று கூறினார்.

கான்ஸ்டபிள் நேஹாவை உடல் ரீதியாக தாக்கி, நேஹாவின் ஆடைகளைக் கிழித்து, அவரைக் கடித்து காயம் ஏற்படுத்தி இருக்கிறார் டிம்பிள். மற்ற காவலர்கள் அவரை அடக்க முயன்றபோது, ​​அவர்களும் தாக்கப்பட்டனர். 

லேடி

டிம்பிளின் வன்முறைச் செயல்கள் காவல்துறை அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. லேடி கான்ஸ்டபிளின் ஆடைகளைக் கிழித்து தாக்கியதும் டிம்பிள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். தலைமறைவான அவரைத் தேடும் பணி நடந்து வருகிறது

டிம்பிள் குமாரி உள்ளூர்வாசி அமர் சிங் என்பவரின் குடும்பத்துடன் தகராறில் இருந்ததாக தெரிய வந்துள்ளது. தப்பியோடியவரைக் கண்டுபிடித்து கைது செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், டிம்பிள் குமாரி கிடைத்தவுடன் கைது செய்யப்படுவார்கள் என பொதுமக்களிடம் உறுதியளித்துள்ளனர். தற்போது தலைமறைவாக உள்ள சந்தேக நபரை தேடும் பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!