நாளை திறப்பு விழா... தமிழகம் முழுவதும் பாஜகவுக்கு சொந்த கட்டிடம்! நாளை தமிழகம் வருகிறார் ஜே.பி.நட்டா!

 
பாஜக திருச்சி

திருச்சி மாவட்ட பாஜக  அலுவலகத்தை திறந்து வைக்க நாளை மார்ச் 10ம் திருச்சி வருகிறார் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா. திருச்சியின் மத்திய பகுதியில் நீதிமன்றத்திற்கு அருகே கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான பாஜக  அலுவலகத்தைவரும் நாளை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா திறந்து வைக்க உள்ளார். தமிழகம் முழுவதும் பாஜக வளர்ச்சி சற்றே ஏறுமுகமாக உள்ள நிலையில் இதன் ஒரு அங்கமாக மாவட்டங்களில் கட்சியை வலுப்படுத்த சொந்தமாக அலுவலக கட்டடங்கள் கட்டும் பணி கடந்த ஆண்டு தொடங்கியது. 

திருச்சி கோர்ட்பாலம் அருகே மாவட்ட அலுவலக கட்டுமான பணிகள் தொடங்கின. கோடி ரூபாய் செலவில் 16 ஆயிரம் சதுரடி பரப்பளவில் தரைதளத்துடன் கூடிய 3 மாடிகள் கொண்டதாக மாவட்ட தலைமை அலுவலகம் உருவாக்கப்பட்டது. கட்சி நிர்வாகிகள் தங்கும் அறை, கூட்ட அறை, வீடியோ கான்பரன்சிங் அறை என பல்வேறு வசதிகள் அமைந்திருக்கின்றன.

நட்டா

இந்த கட்டிடத்தை 10ம் தேதி மதியம் 12.01 மணிக்கு பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா வீடியோ கான்பரன்சிங் மூலம் திறக்கிறார். திருச்சியில் நடக்கவுள்ள திறப்பு விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன், மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகர் உட்படபலர் கலந்து கொள்கிறார்கள்

இதே போல புதுக்கோட்டை உள்ளிட்ட 10 மாவட்டங்களில்பாஜக தலைமை அலுவலகத்தை ஒரேநேரத்தில் ஜேபி நட்டா திறந்து வைக்க உள்ளார். இதற்கு முன்பாக திமுக , கம்யூனிஸ்ட், மதிமுக, காங்கிரஸ் வரிசையில் திருச்சியில் அலுவலகம் திருக்கிறது பாஜக அரசியலில் திருப்புமுனை என்றால் திருச்சியை சொல்வார்கள், அதேபோல இருமுறை நாடாளுமன்ற உறுப்பினராக அரங்கராஜன் குமாரமங்கலம் திருச்சியில் நின்று வென்றார்.

பாஜக திருச்சி

2024ல் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக திமுக அதிமுக அல்லாத கூட்டணியை அமைக்கும் என்றும் அதில் தமாகா, புதிய தமிழகம், தேமுதிக, புதியநீதிக்கட்சி, ஐ.ஜே.கே, உட்பட சில கட்சிகளும் அமமுக, சசிகலா அணியும் இணையும் என்கிறார்கள். கட்சி அலுவலகம் சரி...  மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டுமே?!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web