வைர நகைக்கடை தொடர்புடைய 30 இடங்களில் வருமான வரித்துறை சோதனை... சென்னையில் பரபரப்பு!

 
வருமான வரி சோதனை

வரி ஏய்ப்பு குற்றச்சாட்டின் பேரில், வைர நகைக்கடை மற்றும் தனியார் நிறுவனத்துடன் தொடர்புடைய 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். சென்னை தியாகராயநகர், நுங்கம்பாக்கம், அபிராமபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 100-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

தனியார் நிறுவனம், வைர நகைக்கடை தொடர்புடைய 30 இடங்களில் வருமானவரித் துறை சோதனை

தியாகராயநகர் பசுல்லா சாலையில் செயல்படும் தலைமையகம், வள்ளுவர் கோட்டம் சாலை அலுவலகம், காஞ்சிபுரம் தொழிற்சாலை ஆகிய இடங்களில் தீவிர சோதனை நடந்தது. ரசாயனங்கள், நிலக்கரி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்சார வாகனத் துறைகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இயங்கும் இந்த நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. அதனை தொடர்ந்து இந்த சோதனை தொடங்கப்பட்டது.

இதேபோல், தியாகராயநகர் ஜி.என்.செட்டி சாலையில் உள்ள வைர நகைக்கடை உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடந்தது. இதில் முக்கிய ஆவணங்கள் மற்றும் சொத்து பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் ஆய்வு முடிந்த பின், வரி ஏய்ப்பு விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!