சென்னையில் நடிகர் ஆர்யாவுக்குச் சொந்தமான ஹோட்டல்களில் வருமான வரித்துறை சோதனை

 
ஆர்யா
 

சென்னையில் நடிகர் ஆர்யாவுக்குச் சொந்தமான ஹோட்டல்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.சென்னையில் அண்ணா நகர், கீழ்ப்பாக்கம், கொட்டிவாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் உள்ள Sea Shell உணவகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

வருமான வரித்துறை

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஆர்யா. நடிப்பதோடு, ரியல் எஸ்டேட், உணவகம் உள்ளிட்ட தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறார். இந்த தொழில்களை தனது தம்பியும், நடிகருமான சத்யா மூலமாக மேற்கொண்டு வருகிறார். நடிகர் ஆர்யாவுக்கு சென்னையின் பல்வேறு பகுதிகளில் Sea Shell என்ற பெயரில் ஏராளமான உணவகங்கள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில் சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள Sea Shell ஹோட்டல்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அண்ணா நகர், கீழ்ப்பாக்கம், கொட்டிவாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் இயங்கி 5 ஹோட்டல்களில் வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை நடத்தி வருகின்றனர்.

வருமான வரி

வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாகவும், வரி ஏய்ப்பு நடந்ததாகவும் நடிகர் ஆர்யா மீது புகார் எழுந்ததன் காரணமாக சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. கொச்சியில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் வந்து சோதனை மேற்கொண்டு வருவது தெரிய வந்துள்ளது. அண்ணா நகரில் உள்ள கிளையில் மட்டும் 3 வாகனங்களில் வந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது