புதிய வருமான வரிச் சட்டம் 2025... ஏப்ரல் 1 முதல் அமல்!

 
நிர்மலா
 

1961-ஆம் ஆண்டின் பழைய வருமான வரிச் சட்டத்தை மாற்றி, புதிய ‘வருமான வரிச் சட்டம் 2025’ நடைமுறைக்கு வரவுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்த புதிய சட்டம் வரும் 2026 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வர உள்ளது. இதற்கான புதிய விதிமுறைகள் மற்றும் எளிமைப்படுத்தப்பட்ட வரிப் படிவங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிர்மலா சீதாராமன்

புதிய சட்டம் வரி விகிதங்களை உயர்த்துவதற்காக அல்ல. சிக்கலான விதிகளை எளிமைப்படுத்துவதே இதன் நோக்கம். பழைய சட்டத்தில் இருந்த பல குழப்பமான பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன. இதனால் வரி செலுத்துவோருக்கும் வருமான வரித் துறைக்கும் இடையிலான வழக்குகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ‘முந்தைய ஆண்டு - மதிப்பீட்டு ஆண்டு’ முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக ‘ஒற்றை வரி ஆண்டு’ முறை கொண்டு வரப்படுகிறது. காலதாமதமாக வருமான வரி தாக்கல் செய்தாலும் டிடிஎஸ் தொகையை பெறலாம் என்ற சலுகையும் வழங்கப்பட்டுள்ளது. தனிநபர்கள், நிறுவனங்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த புதிய சட்டம் பொருந்தும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!