புதிய வருமான வரிச் சட்டம் 2025 அமல்... இன்று முதல் வரிச் சேமிப்பு மற்றும் விதிமுறைகளில் அதிரடி மாற்றங்கள்!

 
வருமான வரி கணக்கு செலுத்த கால அவகாசம் மேலும் நீட்டிப்பு! வருமான வரி கணக்கு செலுத்த கால அவகாசம் மேலும் நீட்டிப்பு!

 

மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வரிச் சீர்திருத்தங்கள் இன்று ஏப்ரல் 1, 2026 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகின்றன. 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்த 1961-ம் ஆண்டு வருமான வரிச் சட்டம் விடைபெற்று, எளிய நடைமுறைகளைக் கொண்ட 'புதிய வருமான வரிச் சட்டம் 2025' இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

வருமான வரி

புதிய சட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்கள்:

வரி ஆண்டு குழப்பம் நீக்கம்: இனி 'முந்தைய ஆண்டு', 'மதிப்பீட்டு ஆண்டு'  என்ற குழப்பமான வார்த்தைகள் இருக்காது. அனைத்தும் பொதுவான 'வரி ஆண்டு' என எளிமையாக அழைக்கப்படும்.

படிகளில் அதிரடி உயர்வு:

குழந்தைகள் கல்விப் படி: ஒரு குழந்தைக்கு மாதம் ரூ.100 ஆக இருந்த வரம்பு, இனி ரூ.3,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

விடுதிச் செலவுப் படி: மாதம் ரூ.300-லிருந்து ரூ.9,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

உணவுப் படி: அலுவலகம் வழங்கும் ஒரு வேளை உணவிற்கான வரிவிலக்கு ரூ.50-லிருந்து ரூ.200 ஆக உயர்கிறது.

வரிச் சேமிப்பு: இந்த மாற்றங்களின் மூலம் சம்பளதாரர்கள் ஆண்டுக்கு சுமார் ரூ.1,05,000 வரை வரிச் சேமிப்பைப் பெற வாய்ப்புள்ளது.

பரிசுகளுக்கான விலக்கு: நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் அன்பளிப்புகளுக்கான வரிவிலக்கு வரம்பு ரூ.5,000-லிருந்து ரூ.15,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

முதலீடு மற்றும் வெளிநாட்டுப் பயணம்:

பங்குச்சந்தை வர்த்தகம்: டெரிவேட்டிவ்ஸ் (F&O) வர்த்தகத்தைக் குறைக்க, 'பியூச்சர்' வர்த்தகத்திற்கான STT வரி 0.05% ஆகவும், 'ஆப்ஷன்' வர்த்தகத்திற்கு 0.15% ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டுச் சுற்றுலா: வெளிநாட்டுச் சுற்றுலா பேக்கேஜ்களுக்கான TCS வரி 20%-லிருந்து 2% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது, இது வெளிநாடு செல்பவர்களுக்குப் பெரும் நிம்மதியை அளிக்கும்.

கல்வி மற்றும் மருத்துவம்: வெளிநாடுகளுக்குக் கல்வி மற்றும் மருத்துவத் தேவைக்காகப் பணம் அனுப்பும்போது வசூலிக்கப்படும் வரி 5%-லிருந்து 2% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

நிர்வாக மாற்றங்கள்:
புதிய சட்டம் வந்தாலும் தற்போதைய வரி விகிதங்களில் (Tax Slabs) எந்த மாற்றமும் இல்லை. வரிச் சட்டத்தின் மொழிநடை மட்டும் சாமானிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாக்கப்பட்டுள்ளது. பழைய நிலுவையில் உள்ள வழக்குகள் 1961-ம் ஆண்டு சட்டப்படியே தொடரும்; இன்றைய தேதியில் இருந்து தொடங்கும் புதிய நடவடிக்கைகள் அனைத்தும் 2025-ம் ஆண்டு சட்டத்தின் கீழ் வரும் என வருமான வரித்துறை தெளிவுபடுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!