கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு!! அமைச்சர் பொன்முடி அதிரடி!!

 
கல்லூரி மாணவிகள்

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியாகின. தமிழகம் முழுவது கலை அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூன் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது குறித்து உயர்கல்வி அமைச்சர் பொன்முடி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

exam தேர்வு மாணவிகள் பரீட்சை கல்லூரி

அதில்  இதுவரை தமிழகம் முழுவதும் உள்ள  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர 2 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஜூன் 21ம் தேதி வரை  77,984 மாணவர்கள் அரசு கலை கல்லூரிகளில் சேர்க்கை நடைபெற்றுளது.  இந்நிலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 20% மாணவர் சேர்க்கையை அதிகரித்து கொள்ளலாம். அதே போல்  அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 15% மாணவர் சேர்க்கையை அதிகரித்து கொள்ளலாம் எனவும் பொன்முடி தெரிவித்துள்ளார். கல்லூரிகளில் தற்போது நிரப்பப்பட வேண்டிய   இடங்கள் போதுமானதாக இல்லை என்பதினால்  அதிகரிக்கப்படுவதாக விளக்கம் அளித்துள்ளார்.

பொன்முடி

அதே போல் சுயநிதி கல்லூரிகளில் 10% இடங்களை அதிகரித்துக் கொள்ளலாம்.  திருச்சி பெரியார் கல்லூரிகளுக்கு தன்னாட்சி அங்கீகாரம் ரத்து என்பது தவறான தகவல் . பெற்றோர்கள், மாணவர்கள் இது குறித்து யாரும் அச்சப்படதேவையில்லை. மேலும்  தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூலை 3ம் தேதி தொடங்கப்படும் என  ஏற்கனவே உயர்கல்வித்துறை அறிவித்திருந்தது  குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

From around the web