எல்லையில் பதற்றம்!! ஆயுதங்களை வாங்கி குவிக்கும் இந்தியா..!! போருக்குத் தயாராகும் சீனா!!

 
இந்தியா

இந்தியாவுக்கு பாகிஸ்தான், சீனாவிடம் இருந்து அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. எல்லை தொடர்பான விவகாரங்களில் அவ்வப்போது சிறு சிறு மோதல்கள் நடக்கின்றன. இந்திய ராணுவம் தக்க பதிலடியும் கொடுத்து வருகிறது. இந்த நிலையில் சர்வதேச அளவில் அதிக ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது தெரியவந்துள்ளது.

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமை சேர்ந்த ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி என்ற ஆய்வு நிறுவனம், ஆயுத ஏற்றுமதி, இறக்குமதி குறித்த ஆண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் ஒவ்வொரு நாடும் ஆயுதங்கள் ஏற்றுமதி, இறக்குமதி குறித்த தகவல் வெளியிட்டுள்ளது. 

அந்த ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது, கடந்த 2022ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் அதிக ஆயுதங்களை ஏற்றுமதி செய்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. ஒட்டுமொத்த ஆயுத ஏற்றுமதியில் அமெரிக்காவில் இருந்து மட்டும் 40% ஆயுதங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன.

இந்தியா

இரண்டாவது இடத்தில் ரஷ்யா உள்ளது. அந்த நாட்டில் இருந்து 16% ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. அடுத்ததாக பிரான்ஸ் 11%, சீனா 5.2%, ஜெர்மனி 4.2%, இத்தாலி 3.8%, இங்கிலாந்து 3.2%, ஸ்பெயின் 2.6%, தென்கொரியா 2.4%, இஸ்ரேல் 2.3% ஆயுதங்களை ஏற்றுமதி செய்து அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

இதுபோல அதிக ஆயுதங்களை இறக்குமதி செய்த நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. ஒட்டுமொத்த ஆயுத இறக்குமதியில் இந்தியா மட்டும் 11% ஆயுதங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்துள்ளது. 

அதேநேரம், இந்தியாவுக்கு அதிக ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரஷ்யா 45 % முதலிடத்தில் இருக்கிறது. மேலும் இந்தியா, பிரான்ஸில் இருந்து 29%, அமெரிக்காவிடம் இருந்து 11% ஆயுதங்களை வாங்கியுள்ளது.ஆனால் இது முதல்முறையல்ல. கடந்த 1993ஆம் ஆண்டில் இருந்து சர்வதேச அளவிலான ஆயுத இறக்குமதியில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.

இந்தியா

கடந்த 2013-17 ஆண்டுகளை ஒப்பிடும்போது 2018-22-ம் ஆண்டுகளில் இந்தியாவின் ஆயுத இறக்குமதி சுமார் 11% அளவுக்கு குறைந்திருக்கிறது. உள்நாட்டில் ஆயுத உற்பத்தியை அதிகரித்து வருவதால் அந்த நாட்டின் ஆயுத இறக்குமதி படிப்படியாக குறைந்து வருகிறது.

இந்தியாவை தொடர்ந்து அதிக ஆயுதங்களை இறக்குமதி செய்த நாடுகளின் பட்டியலில் சவுதிஅரேபியா 9.6%, கத்தார் 6.4%, ஆஸ்திரேலியா 4.7%, சீனா 4.6%, எகிப்து 4.5%, தென்கொரியா 3.7%, பாகிஸ்தான் 3.7%, ஜப்பான் 3.5%, அமெரிக்கா 2.7% ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.உக்ரைன் போர் காரணமாக ஐரோப்பிய நாடுகளின் ஆயுத ஏற்றுமதி, இறக்குமதி 47 சதவீதம் வரை அதிகரித்திருக்கிறது, என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web