ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்... ஜாக்டோ ஜியோ அறிவிப்பு! - அரசு இயந்திரம் முடங்குமா?!

 
ஜாக்டோ ஜியோ

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்ளிட்டப் பல கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, தமிழ்நாடு அரசின் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அடங்கிய ஜாக்டோ ஜியோ அமைப்பு, வரும் ஜனவரி 6-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது. இந்தப் போராட்டத்தை எப்படிப்பட்ட அடக்குமுறைகளைக் கொண்டு ஒடுக்கினாலும் அஞ்சப் போவதில்லை என்று மாநில ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

ஜாக்டோ ஜியோ

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தங்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று (டிசம்பர் 13) சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் இடையே செய்தியாளர்களைச் சந்தித்த மாநில ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன், "முதலமைச்சரின் தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது, காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட எங்கள் கோரிக்கைகளைத் தமிழ்நாடு அரசு நிறைவேற்றாததைக் கண்டிக்கிறோம். இது வேலையில்லா இளைஞர்களின் வாழ்வாதாரம் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடிய கோரிக்கையாகும்" என்று வலியுறுத்தினார்.

ஜாக்டோ ஜியோ

மேலும் பேசிய அவர், "எங்களது நான்கு ஆண்டுகால அமைதியான போராட்டம், கோரிக்கைகளை நிறைவேற்றப் போதுமானதாக இல்லை என்பதை அரசின் அமைதி உணர்த்துகிறது. நியாயமான எங்கள் கோரிக்கைகளை வென்றெடுக்க, அடுத்த கட்டமாக, ஜனவரி 6-ஆம் தேதி முதல் தமிழ்நாடு அரசு இயந்திரத்தை முடக்கும் வகையில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த உள்ளோம். இந்தக் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் கூடுதலான ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றுப் போராட்டத்தை வெற்றிபெறச் செய்வார்கள்" என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும், தற்போதுள்ள ஆட்சி நிறைவடையவிருக்கும் நிலையில் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளதாகவும் பாஸ்கரன் குறிப்பிட்டார். இன்று சனிக்கிழமை தேர்வு பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவே உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!