இந்தியாவில் ஆப்கானிஸ்தான் சுற்றுப்பயணம்… டெஸ்ட், ஒருநாள் அட்டவணை அறிவிப்பு!
இந்தியாவில் விளையாடுவதற்காக ஆப்கானிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்கிறது. இதற்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. முதலில் டெஸ்ட் போட்டி நடைபெற்று, பின்னர் ஒருநாள் தொடர் தொடங்குகிறது.
🚨 News 🚨
— BCCI (@BCCI) March 2, 2026
Here's a look at the schedule for Afghanistan Men’s Team’s tour of India in June 2026 🗓️
Details ▶️ https://t.co/OkJVip4AhJ#TeamIndia | #INDvAFG pic.twitter.com/CQhIliTf2E
இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி ஜூன் 6 முதல் 10 வரை சண்டீகரில் நடைபெறும். அதன் பின் ஒருநாள் தொடர் ஜூன் 14 முதல் தொடங்குகிறது. முதல் போட்டி தர்மசாலாவில் ஜூன் 14 அன்று நடைபெறுகிறது. இரண்டாவது போட்டி ஜூன் 17 அன்று லக்னௌவில், மூன்றாவது போட்டி ஜூன் 20 அன்று சென்னையில் நடைபெறும்.
சண்டீகரில் நடைபெறும் இந்த டெஸ்ட் போட்டி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைக்காக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த தொடர் இரு அணிகளுக்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ரசிகர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
