ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா சம்மதம் !
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தி, அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் எண்ணெய் இறக்குமதி செய்ய இந்தியா சம்மதம் தெரிவித்துள்ளது. இது இந்தியா–அமெரிக்கா இடையேயான புதிய வர்த்தக ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாகும். இந்த முடிவை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். உலக அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளில் இது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யா–உக்ரைன் போர் காரணமாக ரஷ்ய எண்ணெய் மீது விதிக்கப்பட்ட தடைகள் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவின் இந்த முடிவு அமெரிக்க அழுத்தத்தின் விளைவாக பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் படி, இந்தியாவுக்கு விதிக்கப்பட்டிருந்த அமெரிக்க பரஸ்பர வரி 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்படும். அதே நேரத்தில், அமெரிக்கா மீது இந்தியா விதித்திருந்த வரிகள் மற்றும் வர்த்தக தடைகள் பூஜ்ஜியமாக குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஒப்பந்தத்தின் கீழ் இந்தியா எரிசக்தி, தொழில்நுட்பம், நிலக்கரி, விவசாயம் உள்ளிட்ட துறைகளில் 500 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை அமெரிக்காவிடமிருந்து வாங்க முன்வந்துள்ளது. ரஷ்ய எண்ணெய் குறைந்த விலையில் கிடைத்த நிலையில், புதிய இறக்குமதி செலவு அதிகரிக்கலாம் என்றாலும், வர்த்தக சலுகைகள் மூலம் அது சமநிலையாக்கப்படும் என அரசு தரப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி மற்றும் வெளியுறவுக் கொள்கையில் இது ஒரு புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
