நாடாளுமன்றத்தில் பரபரப்பு… இந்தியா கூட்டணி தலைவர்கள் அவசர ஆலோசனை!

 
திருச்சி சிவா
 

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் அவசர ஆலோசனை நடத்தினர். மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இந்த ஆலோசனையில் கலந்து கொண்டனர். அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து கூட்டணி எம்பிக்களுடன் விவாதிக்கப்பட்டது.

குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் முன்னாள் ராணுவத் தளபதி நரவணே எழுதிய புத்தகத்தில் இடம்பெற்ற சீன எல்லை பிரச்னை குறித்து பேச ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சித் எம்பிக்கள் மக்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இந்த அமளி காரணமாக பிரதமர் மோடி பேசுவதற்கு முன்பே மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தொடர்பாக இன்று மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆலோசனையில் திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!