இந்தியா அமெரிக்கா வெளியுறவு அமைச்சர் சந்திப்பு... வரிக்குறைப்பு எதிரொலி!
மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அரசு முறைப் பயணமாக கடந்த திங்கட்கிழமை அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார். பிப்.4 வரை நடைபெறும் இந்தப் பயணத்தில், இந்தியா–அமெரிக்கா இடையிலான முக்கிய இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ளன.

இந்நிலையில், வாஷிங்டனில் இன்று மதியம் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவை ஜெய்சங்கர் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். இதுதவிர, முக்கிய கனிமங்கள் தொடர்பான அமைச்சர்கள் கூட்டத்திலும் அவர் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அமெரிக்க அரசின் மூத்த அதிகாரிகள் மற்றும் வெளியுறவு அமைச்சக அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

முன்னதாக, இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்து, இந்திய பொருள்கள் மீதான வரியை 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைத்திருந்தார். இந்தச் சூழலில் நடைபெறும் இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு, சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
