இந்தியா-அமெரிக்க ஒப்பந்தம்… ரஷிய எண்ணெய் கொள்முதல் நிறுத்தமா?

 
trump
 

இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட 25 சதவீத வரியை 18 சதவீதமாக குறைக்க முடிவு செய்யப்பட்டதாகவும் கூறினார். மேலும், ரஷியாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்து அமெரிக்கா மற்றும் வெனிசுவேலாவிலிருந்து அதிகமாக எண்ணெய் வாங்க இந்தியா ஒப்புக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

ஆனால், ரஷிய எண்ணெய் கொள்முதலை நிறுத்துவதாக இந்தியா தரப்பில் இதுவரை எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை. இந்தியாவுடன் அனைத்து துறைகளிலும் உறவை மேம்படுத்த தயாராக உள்ளோம் என்று க்ரெம்ளின் செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் கூறியுள்ளார். இதற்கிடையில், ரஷிய எண்ணெய் இறக்குமதியை முடிவுக்கு கொண்டு வர இந்தியா உறுதி அளித்துள்ளதாக வெள்ளை மாளிகை செயலர் கரோலின் லியாவிட் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு தரப்பில் விளக்கம் வெளியாகாதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும், டிரம்ப் தன்னிச்சையாக ஒப்பந்தத்தை அறிவித்ததாகவும், பிரதமர் மோடி முழுமையாக சரணடைந்துவிட்டதாகவும் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!