இந்தியா - பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் சந்திப்பு... எல்லையில் அமைதியை நிலைநாட்ட போர் நிறுத்த ஒப்பந்தம்!

இந்தியா பாகிஸ்தான் எல்லையில் அமைதியை நிலைநாட்டுவது குறித்து இந்தியா-பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் சந்தித்து சுமார் 75 நிமிடங்கள் பேசியனர்.
காஷ்மீர் எல்லையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் அமலில் உள்ளது. எனினும் இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது எல்லை தாண்டிய துப்பாக்கிச்சூடு, குண்டு வீச்சு போன்ற தாக்குதல்களில் ஈடுபடுகின்றன. அதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சக்கன்-டா-பாக் பகுதியில் இந்தியா-பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இடையேயான சந்திப்பு நடந்தது. சுமார் 75 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில் எல்லையில் அமைதியை நிலைநாட்ட வேண்டியதன் அவசியத்தை இரு தரப்பினரும் எடுத்துரைத்தனர்.
இந்த சந்திப்பு சுமூகமான நடந்ததாகவும், எல்லையில் அமைதியை நிலைநாட்ட இருதரப்பும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற ஒப்புக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், காலை 11 மணியளவில் தொடங்கிய 75 நிமிடங்கள் நீடித்த சந்திப்பு குறித்து இந்திய ராணுவத்தால் எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடப்படவில்லை. சமீபத்தில் நடந்த எல்லை தாண்டிய துப்பாக்கி சூடு சம்பவங்கள், பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சிகள் மற்றும் போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் ஆகியவற்றிற்கு இந்திய ராணுவக் குழு கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!