11 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் .... ஆசிய கோப்பை கிரிக்கெட்!
துபாயில் நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான (இளையோர்) 12-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற அரையிறுதியில் 8 முறை சாம்பியன் ஆன இந்தியா அணி இலங்கையை எதிர்த்து விளையாடியது. மழையால் ஆட்டம் 20 ஓவராக குறைக்கப்பட்டிருந்தது. முதலில் பேட் செய்த இலங்கை அணி 8 விக்கெட்டுக்கு 138 ரன்னில் தங்கியது. இந்திய அணி 18 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
மற்றொரு அரையிறுதியில் நடப்பு சாம்பியன் வங்காளதேச அணி பாகிஸ்தானுடன் மோதியது. மழை காரணமாக ஆட்டம் 27 ஓவர்களாக குறைக்கப்பட்டிருந்தது. முதலில் பேட் செய்த வங்காளதேச அணி 26.3 ஓவர்களில் 121 ரன்னில் சுருண்டது. பாகிஸ்தான் அணி 16.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 122 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடைபெறும் மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் நேரில் மோதுகின்றன. இது 11 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா-பாகிஸ்தான் அணிகள் முதல் முறையாக இறுதிப்போட்டியில் சந்திக்கும் போட்டியாகும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
